அரசு மருத்துவர்கள் - பணி ஆணை வழங்க இடைக்கால தடை..!

அரசு மருத்துவர்கள் - பணி ஆணை வழங்க இடைக்கால தடை..!

தமிழ்நாட்டில் ஆயிரத்து 21 அரசு மருத்துவர்கள் பணியிடங்களுக்கான தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்க இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

கொரோனா காலகட்டத்தில் மருத்துவ உதவி புரிந்த மருத்துவர்கள் மற்றும் துணை மருத்துவர்களுக்கு அரசுப்பணியில் முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என  மத்திய அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

ஆனால் இந்த உத்தரவை பின்பற்றாமல், தமிழ்நாட்டில் காலியாக இருந்த ஆயிரத்து 21 அரசு மருத்துவர் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்டது.

இது தொடர்பாக 14 மருத்துவர்கள் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை  விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், தேர்வு முடிந்து பணி ஆணை வழங்குவதில் இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதையும் படிக்க   | கர்ப்பிணிகளுக்கு பரிசோதனை: ஆயுஷ் மருத்துவர்களை அனுமதிக்க வழக்கு; மத்திய. மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு!