எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பது தான் திராவிட மாடல் ஆட்சி -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பது தான் திராவிட மாடல் ஆட்சி என்று  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.

எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பது தான் திராவிட மாடல் ஆட்சி -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

சென்னையை அடுத்த மறைமலைநகரில், திமுக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உள்ளாட்சித் தேர்தலில் வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொண்டார். தொடர்ந்து பேசிய அவர், கடந்த பத்து ஆண்டுகளில் பாதாளத்தில் கிடந்த தமிழகத்தை 10 மாதத்தில் தலைநிமிர்த்தி உள்ளதாக குறிப்பிட்டார். திராவிட மாடல் ஆட்சியின் பொருளை பட்டியலிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் எல்லோருக்கும் எல்லாம் கிடைப்பது தான் திராவிட மாடல் ஆட்சி எனவும்  அதை கெடுப்பது தான் எதிர்க்கட்சிகளின் வேலை எனவும் விமர்சித்தார்.

மேலும் பட்ஜெட்டில்  அறிவிக்கப்பட்ட திட்டங்கள்  நிறைவேற்றப்பட்டால்  தமிழ்நாடு முதலிடம் பிடிக்கும் எனவும் முதலமைச்சர் நம்பிக்கை தெரிவித்தார். இந்த கூட்டத்தில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.