அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வு..! நேர்த்திக்கடன் செலுத்த ஆன்மீக பயணம் மேற்கொண்ட அதிமுகவினர்....!

அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி தேர்வு..!  நேர்த்திக்கடன் செலுத்த ஆன்மீக பயணம் மேற்கொண்ட அதிமுகவினர்....!

எடப்பாடி பழனிச்சாமி பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கான நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக அதிமுகவினர் ஆன்மீக பயணம் மேற்கொண்டுள்ளனர்.

அதிமுகவின் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். மேலும் கர்நாடக தேர்தலில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுவதற்கு இந்திய தேர்தல் ஆணையம் அங்கீகாரம் கொடுத்துள்ளது.  இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் தீவிர பக்தனும் அதிமுக இளைஞரணி செயலாளருமான  டாக்டர் சுனில் என்பவரின் தலைமையில் 34 பேர்  கர்நாடக மாநிலத்தில் அமைந்துள்ள குக்கி அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு அதிமுக நிர்வாகிகளும் தொண்டர்களும் நேர்த்திக்கடன் செலுத்த ஆன்மீக பயணம் மேற்கொண்டனர்.

முன்னதாக காலை 8 மணி அளவில் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக அலுவலகமான எம்ஜிஆர் மாளிகைக்கு வருகை தந்த அவர்கள் வளாகத்தில் உள்ள முன்னாள் முதலமைச்சர்கள் ஜெ ஜெயலலிதா மற்றும் எம் ஜி ராமச்சந்திரன் ஆகியோரின் திரு உருவ சிலைகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர். பின்னர், அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் கொடி அசைத்து  துவக்கி வைக்க 34 பேரும் தங்களது ஆன்மீகப் பயணத்தைத்  தொடங்கினர். 

இதையும் படிக்க    }  ஓபிஎஸ் தரப்பு வேட்புமனு ஏற்பு... கர்நாடக தலைமை தேர்தல் அதிகாரிக்கு ஈபிஎஸ் கடிதம்!

இந்த நிலையில்  ஆன்மீகப் பயணத்தை தொடர்ந்து கர்நாடக மாநிலத்தில் உள்ள குக்கி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கு காவடி மற்றும் முடி காணிக்கை வேண்டுதலை நிறைவேற்ற உள்ளனர். இந்த ஆன்மீகப் பயண தொடக்க நிகழ்ச்சியில் அம்மா பேரவை செயலாளர் கே ஏ கே முகில் கழக எம்ஜிஆர் அணியினர் செயலாளர் மற்றும் முக்கிய நிர்வாகிகள் சிலர் பங்கேற்றனர். 

இதையும் படிக்க    }  அதிமுகவிற்கு தொடர்பில்லாத ஓ.பி.எஸ்...அதிமுக கொடி, சின்னத்தை பயன்படுத்தக்கூடாது!