எடப்பாடி பழனிசாமி மகன் மீது 400 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு...

கடந்த அ.தி.மு.க ஆட்சியில், கரூர் தமிழ்நாடு செய்தித்தாள் காகித ஆலைக்கு தரமற்ற நிலக்கரி வாங்கியதில் சுமார் 400 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

எடப்பாடி பழனிசாமி மகன் மீது 400 கோடி ரூபாய் ஊழல் குற்றச்சாட்டு...

கரூர் டிஎன்பிஎல் ஆலையில்  ஆண்டுக்கு சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் வரை வர்த்தகம் நடைபெற்று வருகிறது. இந்த ஆலைக்கு  தேவைப்படும் நிலக்கரி வெளிநாட்டில் இருந்து கொள்முதல் செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த அ.தி.மு.க ஆட்சியின் போது, 4 ஆண்டுகளாக தரமற்ற நிலக்கரி கொள்முதல் செய்யப்பட்டதாகவும், சுமார் 400 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்துள்ளதாகவும் புகார் எழுந்துள்ளது

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான லண்டன் சுப்பிரமணி என்ற அதிகாரி மூலம் இந்த நிலக்கரி கொள்முதல் நடந்ததாகவும், இதில் பழனிசாமியின் மகன் பிரபு மற்றும் அவரது அக்கா மகன் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த ஆட்சியில் தொழில்துறை அமைச்சராக இருந்த எம்.சி. சம்பத்தின் நேரடி பார்வையில் இந்த கொள்முதல் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது.

இது குறித்து நிர்வாக மேலாண்மை இயக்குனர் ராஜீவ் ரஞ்சன் தலைமையில் அதிகாரிகள் குழு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விசாரணையின் முதற்கட்டமாக டி.என்.பி.எல் ஆலையின் முதன்மை பொது மேலாளர் பாலசுப்பிரமணியம், தரக்கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு அதிகாரி பாலகிருஷ்ணன் ஆகிய இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.