மீண்டும் அனல் மின் நிலையத்தில் 4 அலகுகளில் மின்சார உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம்..!

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில், நிலக்கரி கையிருப்பு குறைந்ததால், 4 அலகுகளில் மின்சாரம் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. 

மீண்டும்  அனல் மின் நிலையத்தில் 4 அலகுகளில் மின்சார உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தம்..!

தூத்துக்குடி மாவட்டத்தில், உள்ள அனல் மின் நிலையத்தில் 210 மெகா வாட் மின் உற்பத்தி  செய்யும் திறன் கொண்ட 5 யூனிட்டுகள் உள்ளன. இதன் மூலம் நாளொன்றுக்கு  ஆயிரத்து 50 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இதற்கென நாள்தோறும்  25 ஆயிரம் டன் நிலக்கரி பயன்படுத்தப்பட்டது.

இந்தநிலையில் கோடைக்காலம் காரணமாக மின் உற்பத்தி அதிகரித்துள்ளதால், நிலக்கரிக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல்மின் நிலையத்திலும் நிலக்கரியின் கையிருப்பு 25 ஆயிரம் டன்னாக குறைந்துள்ளது. இதனால் அங்குள்ள 3 அலகுகளில் மின் உற்பத்தி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. ஒரு யூனிட்டில் மட்டும் 210 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

தேவையை ஈடுகட்ட தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் 55 ஆயிரம் டன்  நிலக்கரி இறக்கப்பட்டு வருகிறது. அவை 10 நாட்களுக்கு மட்டுமே போதுமானதாக இருக்கும் என்றும், தடையின்றி நிலக்கரி கிடைத்தால் மட்டுமே ஐந்து பிரிவுகளிலும் முழுமையான மின் உற்பத்தி செய்ய முடியும் எனவும்  அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.