தண்ணீர் கொண்டு செல்வதில் ஏற்பட்ட தகராறு- விவசாயி கல்லால் அடித்துக் கொலை...

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே வயலுக்கு தண்ணீர் கொண்டு செல்வதில் ஏற்பட்ட தகராறில் விவசாயி ஒருவர் கல்லால் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தண்ணீர் கொண்டு செல்வதில் ஏற்பட்ட தகராறு- விவசாயி கல்லால் அடித்துக் கொலை...

திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே உள்ள சித்தாம்பூரைச் சேர்ந்தவர் மணி . இவர் ஊருக்கு அருகில் உள்ள அரை ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். கடந்த ஒரு வருடமாக அய்யாலக்கரை வாய்க்காலிருந்து  புறம்போக்கு நிலத்தின் வழியாக  குழாய் மூலம் தன் விவசாய நிலத்திற்கு தண்ணீர் கொண்டு சென்றுள்ளார். 

இந்நிலையில் இவரின் வயலுக்கு பக்கத்தில்  செந்தில்குமார் மற்றும் அவரது சகோதர்களுக்கு  சொந்தமாக 50 சென்ட் விவசாய நிலம் உள்ளது. இதில் செந்தில்குமார் புறம்போக்கு நிலத்தில் ஒரு பகுதியை ஆக்கிரமித்து  மணியிடம் இந்த வழியாக தண்ணீர் கொண்டு செல்லக் கூடாது என தகராறு செய்துள்ளார். 

இந்த தகராறு சில நாட்கள்  நீடித்த நிலையில் இன்று மீண்டும் இருவருக்கும் வாய்த் தகராறு ஏற்ப்பட்டது. இதில் ஆத்திரமடைந்த செந்தில்குமார் அருகில் கிடந்த கல்லை எடுத்து மணியை தாக்கியதாக கூறப்படுகிறது. இந்த தாக்குதலால் மணி மயங்கி விழுந்த மணி சம்பவ இடத்திலேயே பலியானார்.

இதுகுறித்து தகவலறிந்த ஜீயபுரம் காவல் துணை கண்காணிப்பாளர் செந்தில்குமார் மற்றும் மண்ணச்சநல்லூர் காவல் ஆய்வாளர் ரமேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று இறந்தவர் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்க்காக திருச்சி அரசு மருத்துவனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விவசாயியை கொலை செய்து விட்டு தப்பியோடிய செந்தில்குமாரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.