கொரோனா தொற்று குறைவதால் பரிசோதனையை குறைக்க முடிவு - மா.சுப்பிரமணியன்

தொற்று குறைந்து வருவதால் பரிசோதனையும் குறைக்கப்படும் என மக்கள் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

கொரோனா தொற்று குறைவதால் பரிசோதனையை குறைக்க முடிவு - மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வருவதால் பரிசோதனை எண்ணிக்கையும் குறைக்கப்பட இருப்பதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சிங்காரவேலரின் பிறந்தநாளை முன்னிட்டு சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அவரது சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியபின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனா அறிகுறிகள் இருந்தால் மட்டுமே பரிசோதனை மேற்கொள்ள இருப்பதாகவும் தெரிவித்தார். ராமநாதபுரம் புதிய அரசு மருத்துவக்கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரி மாணவர்கள் 50 பேரை சேர்த்துக்கொள்ள மத்திய அரசின் ஒப்புதலுடன் தமிழக அரசு அனுமதி வழங்கி இருப்பதாகவும் தெரிவித்தார்.