”ஊராட்சி தலைவர் பதவிநீக்கம் குறித்து கருத்து கேட்பு கூட்டம்” - புஷ்பத்தூரில் பரபரப்பு!

திண்டுக்கல் மாவட்டம் புஷ்பத்தூரில் ஊராட்சி தலைவர் பதவிநீக்கம் குறித்து கருத்து கேட்பு கூட்டம், பழனி தாசில்தார் தலைமையில் நடைபெற்றது.

”ஊராட்சி தலைவர் பதவிநீக்கம் குறித்து கருத்து கேட்பு கூட்டம்” - புஷ்பத்தூரில் பரபரப்பு!

பழனி அருகே புஷ்பத்தூர் ஊராட்சியின் தலைவராக செல்வராணி உள்ளார். இந்தநிலையில் ஊராட்சி தலைவர், துணைத்தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுக்கு இடையே பிரச்சனை இருப்பதாகவும், இதனால் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் முறையாக பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதையடுத்து ஊராட்சி தலைவர் மற்றும் துணைத்தலைவரை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக கருத்துகேட்பு கூட்டம் நடத்த வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி, புஷ்பத்தூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் இன்று வார்டு உறுப்பினர்கள் இடையே கருத்துகேட்பு கூட்டம் நடைபெற்றது. இவர்கள் தெரிவித்ததன் அடிப்படையில் மாவட்ட ஆட்சியர் விரைவில் முடிவெடுப்பார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன