கோவை - சீரடி இடையே தனியார் ரயில் சேவை: ரயில்களை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்!

கோவையிலிருந்து சீரடிக்கு இன்று முதல் தனியார் ரயில் சேவை தொடங்கவுள்ள நிலையில், ரயிலை சுத்தப்படுத்தி அலங்காரம் செய்யும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோவை - சீரடி இடையே தனியார் ரயில் சேவை: ரயில்களை சுத்தம் செய்யும் பணிகள் தீவிரம்!

ஷீரடிக்கு 5 நகரங்களில் இருந்து தனியார் ரயில்களை இயக்குவதற்கு ‘பாரத் கௌரவ்’ என்ற திட்டத்தின் கீழ், ரயில்வே துறைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் கோவையிலிருந்து சீரடிக்கு தனியார் ரயில் சேவை, இன்று மாலை முதல் தொடங்கவுள்ளது. இதனையொட்டி, சுத்தம் செய்யப்பட்டுள்ள ரயில் பெட்டிகள், நீலம் மற்றும் மஞ்சள் நிற வண்ணம் பூசப்பட்டு, புதுபொலிவுடன் காணப்படுகிறது.  

மேலும், கோவையிலிருந்து சீரடிக்கு செல்ல, சாதாரண ஸ்லீப்பர் கட்டணம் ஆயிரத்து 280 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தனியார் நிறுவனம் இரண்டாயிரத்து 500 ரூபாயாகவும், குளிர்சாதன முதல் வகுப்பு படுக்கை கட்டணம் பத்தாயிரம் ரூபாயாகவும் வசூலிப்பதால், இந்த டிக்கெட் கட்டணம் விலை பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.