தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்....

குழந்தைகளின் பாதுகாப்பிற்கும், குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளை தடுப்பதற்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்படும் என தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கையை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்டார்....

தமிழ்நாடு மாநில குழந்தைகளுக்கான கொள்கையை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமை செயலகத்தில் இன்று வெளியிட்டார்.அதில், எந்த ஒரு குழந்தையும் விடுபடாமல் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கொள்கை கடைபிடிப்பதை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும் என்றும் குழந்தைகளின் பாதுகாப்பிற்கும், குழந்தைகளுக்கு எதிரான அனைத்து வகையான வன்முறைகளை தடுப்பதற்கும் சமமான முக்கியத்துவம் அளிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

குழந்தைகள் தொடர்பான அனைத்து பிரச்னைகளையும் கண்டறிந்து, தலையிட்டு தீர்வு காண கிராமம், வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில மாநில அளவிலான அமைப்புகள் உருவாக்கப்படுவதோடு. , குழந்தைகளின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான குறைதீர் அமைப்புகள் மேம்படுத்தப்பட்டு, வலுப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி, பாலின சமத்துவம், அறம் சார்ந்த மதிப்பீடுகள் குறித்த கல்வி, வாழ்க்கை திறன் மற்றும் தற்காப்பு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து கற்பித்தல் உருவாக்கப்படும் என்றும், பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கு மாண்புடன் கூடிய கண்ணியம் மற்றும் நேர்மறை ஒழுக்கமுடைய கலாச்சாரம் கட்டமைக்கப்படுவதோடு.,

வகுப்பிற்கு அல்லது வெளியில் எந்த ஒரு வடிவத்திலும் மாணவர்களுக்கு உடல் ரீதியான தண்டனை மற்றும் மன ரீதியான துன்புறுத்தல்கள் தடை செய்யப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அனைத்து குழந்தைகளையும் பொறுப்புடைய குடிமக்களாக மேம்படுத்த வழக்கமான பாடத்திட்டத்தின் ஒரு பகுதியாக அரசியலமைப்பு உரிமைகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் குழந்தைகளை பாதுகாப்பதற்கு என்று பிரத்யேகமாக பேரிடர் மற்றும் அவசர நிலை மேலாண்மை அமைப்பு உருவாக்கி செயல்படுத்தப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.