தேர்தல் வாக்குறுதியில் அளித்த திட்டங்களின் நிலை என்ன? அமைச்சர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை!

அமைச்சர்கள், துறை சார்ந்த செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். 

தேர்தல் வாக்குறுதியில் அளித்த திட்டங்களின் நிலை என்ன? அமைச்சர்களுடன் முதலமைச்சர் இன்று ஆலோசனை!

குறுவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதை அடுத்து. டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை ஆய்வு செய்வதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2 நாள் சுற்றுப் பயணம் மேற்கொண்டார். முதலில் திருச்சி, தஞ்சாவூர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்ட முதலமைச்சர், தொடர்ந்து 2வது நாளாக நேற்று நாகை, மயிலாடுதுறை, திருவாரூர் மாவட்டங்களில் ஆய்வு மேற்கொண்டார்.  

இந்நிலையில், அமைச்சர்கள், துறை சார்ந்த செயலாளர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்துகிறார். இதில், தேர்தல் வாக்குறுதியில் அளித்த திட்டங்களின் நிலை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது.