சந்திராயன் - 3 வெற்றிப்பயணம் - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வாழ்த்து..!

சந்திராயன் - 3 வெற்றிப்பயணம் - சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வாழ்த்து..!

நிலவின் தென் துருவத்தில் தரை இறங்கிய விக்ரம் லேண்டர்; சாதனையை நிகழ்த்திக் காட்டிய இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கும், பணியாளர்களுக்கும் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், குறிப்பிட்டதாவது:-

கடந்த ஜூலை 14-ம் தேதி எல்விஎம் - 3 ராக்கெட் வாயிலாக விண்ணில் செலுத்தப்பட்ட்ட சந்திராயன் - 3 விண்கலமும், விக்ரம் லேண்டரும், ரோவர் சாதனமும் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியிருப்பது இந்தியரான ஒவ்வொருவருக்கும் மிகவும் பெருமை படக்கூடிய தருணமாகும். உலகின் பல நாடுகள் முயற்சித்த சவாலான செயலை நமது இந்திய விஞ்ஞானிகள் மிகவும் நுணுக்கமாக திறம்பட செய்து வெற்றி கண்டு உலகத்தரம் வாய்ந்த விஞ்ஞானிகள் என்பதை பறைசாற்றியிருக்கின்றார்கள்.

சுயசார்பு இந்தியா உருவெடுப்பதற்கும், விண்வெளித்துறையில் முதன்மை பெற்று தனித்தடம் பதிப்பதற்கும் உதாரணமாக நடந்தேறிய இந்நிகழ்வால் உலக நாடுகள் இந்தியாவின் சாதனை கண்டு அதிசயித்து வருகிறது. 

விண்வெளி பயணத்தின் மைல்கல்லாக அமைந்த  இந்த மிகப்பெரிய சாதனையை அனைத்து இந்தியரும் உணர்வுப்பூர்வமாக கொண்டாடுவோம்.

 இஸ்ரோ விண்வெளி ஆராய்ச்சு மையத்தில் இருந்து ஏவப்பட்ட சந்திராயன் - 3 நிலவின் தென் துருவத்துக்கு ஆருகே தடம்பதித்த உலகின் முதல் நாடு இந்தியா என்ற பெருமையை தேடித்தந்துள்ளது. 

சந்திராயன் - 3 விண்கலம் வெற்றிகரமாக நிலவில் நிலைநிறுத்தப்பட உழைத்த அனைத்து விஞ்ஞானிகளுக்கும், தொழில்நுட்பவியலாளர்களுக்கும், பணியாளர்களுக்கும்ம் என் சார்பிலும், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் சார்பிலும் நல்வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன்.  

இவ்வாறு தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இதையும்  படிக்க  | இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்த்து...!