பொள்ளாச்சியில் பாஜகவினர் உண்ணாவிரத போராட்டம் ...! காவல்துறையினர் குவிக்கப்பட்டதால் பரபரப்பு...!

பொள்ளாச்சியில்  பாஜகவினர் உண்ணாவிரத போராட்டம் ...! காவல்துறையினர்  குவிக்கப்பட்டதால் பரபரப்பு...!

பொள்ளாச்சி பாரதிய ஜனதா கட்சி நடத்தும் உண்ணாவிரத போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு ,நகராட்சி முன்பு போலீசார் குவிக்கப்பட்டதால் அந்த பகுதியில் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.    

   
பொள்ளாச்சியில்,  நகராட்சி சொத்து வரி,வீட்டு வரி, குடீநீர்வரி,பாதாள சாக்கடை வரி சொத்து வரி அதிக அளவில் இருப்பதாக கூறி பாரதிய ஜனதா கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் அறிவிக்கப்பட்டது. 

பொள்ளாச்சி நகராட்சியை கண்டிக்கும் விதமாக கோவை தெற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி பொள்ளாச்சி நகராட்சி அலுவலகம் எதிரில் உண்ணாவிரதம் நடத்த 12ம் -தேதி (இன்று) கிழக்கு காவல் நிலையத்தில் பாரதிய ஜனதா கட்சி வழக்கறிஞர் உண்ணாவிரதத்திற்கு அனுமதி கேட்டு மனு அளித்திருந்தார். 

இதையும் படிக்க:.....  திருவள்ளூர் மாவட்ட அகழ்வு ஆராய்ச்சியில்,.. கண்ணாடி மணிகள் கண்டெடுப்பு...!

இந்நிலையில் கடந்த பத்தாம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த போலீசார் அனுமதி மறுத்தனர். 'தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா தொற்று அதிக அளவில் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது, உண்ணாவிரதம் நடக்கும் பகுதி பொதுமக்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள்,  அதிகளவில் நடமாடும் பகுதி என்பதாலும், போக்குவரத்து அதிகம்  உள்ள பகுதி என்பதாலும்  போராட்டம் நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது' எனக்  காவல்துறை வட்டாரத்தில் தெரிவித்தனர்.

இவ்வாறிருக்க,  பாரதிய ஜனதா கட்சியினர் அனுமதி இல்லாமல் நகராட்சியை முழுவதும் போராட்டம் நடத்தும்  நோக்கத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்டோர் கூடியதால், கோவை மாவட்ட கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின் பேரில் பொள்ளாச்சி ஏ.டிஸ்.பி.பிருந்தா தலைமையில் 350 க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அதிகளவில் காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டதால் அந்த  பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. 

இதையும்  படிக்க:.....பிச்சைக்காரன் 2 தடைகோரிய வழக்கு... உயர்நீதிமன்ற தீர்ப்பு என்ன?!!