உடல் நலக்குறைவுக்கு பின்னர் ஒரு வாரத்திற்குப்பின் நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்பில் மகேஷ்...!

உடல் நலக்குறைவுக்கு பின்னர்  ஒரு வாரத்திற்குப்பின் நிகழ்ச்சியில் பங்கேற்ற அன்பில் மகேஷ்...!

சென்னை மயிலாப்பூரில் தென்மேற்கு மாவட்ட திமுக சார்பில் "ஓய்வறியாச் சூரியனின் ஒல்காப்புகழ்" கவிதை தொகுப்பு நூல் வெளியீடு விழாவில் அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்றார்.

சென்னை மயிலாப்பூரில் உள்ள பாரதிய வித்யா பவனில் சென்னை தென்மேற்கு மாவட்ட திமுக சார்பில் "ஓய்வறியாச் சூரியனின் ஒல்காப்புகழ்" கவிதை தொகுப்பு நூல் வெளியீடு விழா நடைபெற்று வருகிறது. இதில் பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன், தமிழ்நாடு பாடநூல் கழக தலைவர் திண்டுக்கல் லியோனி ஆகியோர் பங்கேற்று நூலினை வெளியிட்டனர். 

பின்னர் மேடையில் உரையாற்றிய அமைச்சர் அன்பில் மகேஷ்:- 

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் மாவட்டம் தோறும் நிகழ்ச்சிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

அதன்படி சென்னை தென்மேற்கு மாவட்டம் சார்பில் மாவட்ட செயலாளர் மயிலை.த.வேலு ஏற்பாட்டில் ஓய்வறியாச்சூரியனின் ஒல்காப்புகழ் நூல் வெளியீடு, கலைஞரின் பேனா கவித்திருவிழா பங்கு பெற்ற கவிஞர்களுக்கு பரிசளிப்பு விழாவில் பங்கேற்றது மகிழ்ச்சி அளிக்கிறது.

ஒரு வாரத்திற்கு பிறகு தான் பங்கேற்கும் நிகழ்ச்சி இது, இந்த நிகழ்வில் நான் கலந்து கொண்டேன் என்பதை விட நான் எழுச்சி பெற்றேன் என்று சொல்ல வேண்டும். காரணம் கலைஞர் என்று சொல்.  அன்பில் மகேஷ் மட்டும் எழுச்சி கொண்ட சொல்லல்ல கலைஞர். ஒட்டுமொத்த தமிழ்நாடும் எழுச்சி கொண்ட சொல்.  கலைஞர். எந்த மாவட்ட செயலாளரும்  எடுக்காத முயற்சியை மயிலை த.வேலு எடுத்துள்ளார்.

இன்று உதயநிதி தமிழில் தவறில்லாமல் எழுதுவதற்கு காரணம் கலைஞர் தான்.  காரணம் கலைஞர் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்தில் இருந்து  முரசொலிக்கு எழுதும் கவிதைகளை ஒவ்வொரு நாளும் அவரது உதவியாளர் சண்முகநாதனிடம் கொடுத்து பார்க்கச் சொல்வார், அவர்  பள்ளி செல்லும் உதயநிதியை அழைத்து  படிக்க சொல்வார் அன்று கலைஞரின் கவிதைகளை படித்து புரிந்து கொண்டு தான் இன்று உதயநிதி தமிழை பிழையில்லாமல் ஒவ்வொரு கவிஞர்களுடைய கவிதைக்கும் அழகாக தமிழில் பிழையில்லாமல் பதில் அளித்து வருகிறார்.

முத்தமிழறிஞரை பற்றி மட்டுமே அனைவரும் இந்த நூலில் எழுதியுள்ளார்கள். இந்த புத்தகத்தை படித்தாலே நம்மை அறியாமலேயே கவிதை வரும். தமிழ் என்று யார் எழுதுகிறார்களோ,.. அவர்கள் எல்லாம் பரிசு பெறுபவர்கள் தான்.

சோர்வு நீங்கி புத்துணர்ச்சி பெற்றவனாக நான் தற்பொழுது நிற்கிறேன், என்றும் தெரிவித்தார்.

இதையும் படிக்க   | மத்திய பாஜக அரசை சாடிய அமைச்சர் உதயநிதி ..!