உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க.வுடன் தான் கூட்டணி... கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் டி.ராஜா...

உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க.வுடன்தான் கூட்டணி என்று கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் டி.ராஜா தெரிவித்துள்ளார்.

உள்ளாட்சி தேர்தலிலும் தி.மு.க.வுடன் தான் கூட்டணி... கம்யூனிஸ்ட் கட்சி பொது செயலாளர் டி.ராஜா...

சென்னையில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைமையகமான பாலன் இல்லத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர்  டி.ராஜா செய்தியாளர்களை சந்தித்தார்.

முன்னதாக தேசிய பிரச்சினைகளுக்கான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு பற்றி பேசினார். தற்பொழுது இந்தியாவின் பொருளாதாரம் நலிவடைந்து வருகிறது. பொது சுகாதாரம் மக்களின் சுகாதார தேவையை பூர்த்தி செய்யவில்லை. தற்போது பொருளாதார நெருக்கடி முன் எப்போதும் கண்டிராத அளவிற்கு வறுமையை உருவாக்கி உள்ளது. 23கோடி மக்கள் புதிதாக வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளனர்.மதிய அரசின் வரிக் கொள்கைதான் விலைவாசி உயர்வுக்கு காரணம் என்றும் கூறினார். 

கொரோணாவிற்கு பிறகு தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் ஏற்றத்தாழ்வு உண்டாகி இருகிறது.பொது துறை நிறுவனங்களை  தனியார்மயமாக்கபடுகின்றன. அந்நியமுதலீடு அதிகமாக பெற முயற்சி செய்து வருகின்றனர். ராணுவ தளவாட உற்பத்தியை தனியாரிடம் கொடுக்க அரசு முற்படுகிறது. இது ஆபத்தை விளைவிக்கும் என்றும் கூறினார். பிரிவினை கருத்தை கூறுபவர்கள் தமிழகத்தின் சரித்திரத்தை தெரிந்து கொண்டு பேசுங்கள் என்றும் கூறினார்.

கொங்குநாடு பிரிவினை கருத்தை மக்கள் விரோத கருத்தாக பார்க்கிறேன். பிரிவினை கருத்தை கூறுபவர்கள் தமிழகத்தின் சரித்திரத்தை தெரிந்து கொண்டு பேசுங்கள் என்றும் கூறினார். கொங்குநாடு பிரிவினை கருத்தை மக்கள் விரோதகருத்தாக பார்க்கிறேன். நீட்தேர்வில் தமிழகத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும் என்பது எங்களின் நிலைபாடு. கல்வி என்பதுமாநில உரிமை அதனை நீட் தேர்வு  பரிப்பதாக உள்ளது.

அனைத்து கட்சிகளையும் அரவணைத்து செல்லும் போக்கை தற்போதுள்ள அரசு மேற்கொண்டு வருவது பாராட்டுக்குரியது. பொது கருத்துக்களை பெறுவதற்கு மிக சிறந்த வழியாகும். மக்களுக்கான ஆட்சியாக உள்ளது எனவே கூட்டணி உள்ளாட்சித் தேர்தலிலும் தொடரும் என்றும் கூறினார்.