தாம்பரம்: மின் விசிறி-க்கு மின் இணைப்பு கொடுக்க முயன்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!!

தாம்பரம்: மின் விசிறி-க்கு மின் இணைப்பு கொடுக்க முயன்ற இளைஞர் பரிதாபமாக உயிரிழப்பு!!

சென்னை தாம்பரம் அடுத்த முடிச்சூர் தெற்கு லட்சுமி நகர் பகுதியில் வசித்து வருபவர் சந்திரன் (வயது-50). இவரது மனைவி பானு (வயது-45). இவர்களது இவர்களது மூன்றாவது மகன் பாபு (வயது-27) ஐ.டி.ஐ. முடித்த இவர் புது பெருங்களத்துாரில் உள்ள தனியார் மென்பொருள் நிறுவனத்தில் கார் ஓட்டுனராக பணிபுரிந்து வந்தார்.

இந்த நிலையில் வீட்டில் இருந்த, மின்விசிறி பழுதடைந்ததால், காரில் பயன்படுத்தப்படும், சிறிய ரக மின் விசிறியை பயன்படுத்த முடிவு செய்து, அதற்கு மின் இணைப்பு கொடுக்க முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்துள்ளார்.

அவரை மீட்ட, உறவினர்கள் அருகில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர் பாபு ஏற்கனவே இறந்ததாக தெரிவித்துள்ளனர். உடனே இது குறித்து பெருங்களத்தூர் பீர்க்கன்காரணை போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின் அடிப்படையில் உடலை கைப்பற்றிய போலீசார் உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.