திருமயம் அருகே அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தியதாக 9 பேர் மீது வழக்குப்பதிவு.!!

புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தியதாக 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

திருமயம் அருகேயுள்ள குலமங்களம் மலையக்கோவிலில் தைப்பூச திருவிழாவை முன்னிட்டு ஆண்டு தோறும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது.

இதில் 500 காளைகள் மற்றும் 150க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் கலந்துகொண்டனர். வெற்றி பெற்ற வீரர்கள் மற்றும் காளைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இந்நிலையில், அனுமதியின்றி ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்தியதாக விழாக்குழுவை சேர்ந்த 9 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.