3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொளி.. சொந்த ஊர்களுக்குச் செல்ல கோயம்பேட்டில் குவிந்த மக்கள்!!

3 நாட்கள் தொடர் விடுமுறை எதிரொளி..  சொந்த ஊர்களுக்குச் செல்ல கோயம்பேட்டில் குவிந்த மக்கள்!!

3 நாட்கள் தொடர் விடுமுறை காரணமாக சொந்த ஊர்களுக்குச் செல்ல மக்கள் குவிந்ததால், சென்னை கோயம்பேடு பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

சொந்த ஊர்களுக்குச் செல்ல குவிந்த மக்கள்

வார விடுமுறை மற்றும் சுதந்திர தின விழாவையொட்டி இன்று, நாளை மற்றும் நாளை மறுநாள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்குச் செல்ல, மக்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் குவிந்தனர்.

நீண்ட வரிசையில் காத்திருந்த வாகனங்கள்

இதனால் கோயம்பேடு பகுதியில் இருந்து மெட்ரோ பாலம் வரை சுமார் 2 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதைத்தொடர்ந்து பாதுகாப்புப் பணியில் இருந்த போலீசார், நீண்ட நேரம் வாகனங்களை சீர்படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.