வெற்றியை கைப்பற்ற தீயாய் களமிறங்கும் சென்னை அணி.. முதல் வெற்றியை பதிவு செய்யுமா?

நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்யுமா? என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

வெற்றியை கைப்பற்ற தீயாய் களமிறங்கும் சென்னை அணி.. முதல் வெற்றியை பதிவு செய்யுமா?

நடப்பு சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, இந்த தொடரில் இதுவரை விளையாடியுள்ள 3 போட்டிகளிலும் தோல்வியைத் தழுவி ரசிகர்களை மிகவும் ஏமாற்றமடையச் செய்துள்ளது.

இந்த நிலையில், இன்று மாலை 3.30 மணிக்கு மும்பை டி.ஒய். பட்டீல் மைதானத்தில் நடைபெறும் போட்டியில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சன்ரைசர்ஸ் ஐதராபாத்தை எதிர்கொள்கிறது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தொடர் தோல்வியில் இருந்து மீண்டு, ஐதராபாத்தை தோற்கடித்து முதல் வெற்றியை பெறுமா? என்ற எதிர்பார்ப்பு கிரிக்கெட் ரசிகர்களிடையே ஏற்பட்டுள்ளது.

அதேபோல், ஐதராபாத் அணியும் முதல் வெற்றிக்காக காத்திருக்கும் சூழலில், இரு அணிகளும் முதல் வெற்றிக்காக கடுமையாக போராடும் என்பதால், இந்த போட்டியில் விறுவிறுப்பிற்கு பஞ்சம் இருக்காது.