பந்து வீச்சாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் தவறு நடந்ததா? விராட் கோலி விளக்கம்

இந்தியாவின் பந்து வீச்சாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் எந்த தவறும் நடைபெறவில்லை என இந்திய அணி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

இங்கிலாந்து சௌதாம்ப்டானில் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி அபார வெற்றிபெற்றுள்ளது. இந்தியாவின் தோல்விக்கு பத்து வீச்சாளர்களின் தேர்வே காரணம் என பலரும் கூறிய நிலையில் பந்து வீச்சாளர்களைத் தேர்ந்தெடுப்பதில் எந்த தவறும் நடைபெறவில்லை என கேப்டன் விராட் கோலி மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும் இதே முறையில் பல போட்டிகளை இந்தியா வென்றுள்ளதாகவும் குறிப்பிட்டார். இன்னும் கூடுதலாக ரன்களை அடித்திருந்தால் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு இருந்திருக்கும் எனத் தெரிவித்தார். இதனிடையே இந்திய அணி சார்பில் 3 வேக பந்து வீச்சாளர்களும் 2 சுழற்பந்து வீச்சாளர்களும் இடம் பெற்றிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.