கொஞ்சமாவது சொந்தமா யோசிங்கப்பா!!!- கேலி செய்த சொமாட்டோ!!!

இந்திய அணி தோற்றதை அடுத்து, பாகிஸ்தானின் உணவு டெலிவரி செயலி, ஒரு மீம் பதிவிட்டிருந்தது. அதனை சொமாட்டோ நிறுவனம் கேலி செய்துள்ளது.

கொஞ்சமாவது சொந்தமா யோசிங்கப்பா!!!- கேலி செய்த சொமாட்டோ!!!

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே போட்டிகள் பல ஆண்டுகளாக நிலவி வருகிறது. அதிலும், உலக கோப்பை என வந்து விட்டால், கேட்கவே வேண்டாம். இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே போர் போலவே பார்க்கப்படும். அப்படிப்பட்ட சமீபத்திய ஆசிய கோப்பை தொடரில், இந்தியாவுடன் போட்டியிட்டு, பாகிஸ்தான் அணி தோல்வி அடைந்தது.

இதனையடுத்து, சமீபத்திய போட்டிகளில், இந்திய அணி தோல்வியுற்றது. அதற்கு இந்தியர்கள் பலரும் தங்களது அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தனர். அது மட்டுமின்றி தோல்விக்கு காரணமாக இருந்த கிரிக்கெட் வீரரையும் மோசமாக கேலி செய்திருந்தனர். அர்ஷ்தீப் சிங் என்ற சீக்கியர் ஒருவர் கேட்சை விட்டதனால், ‘காலிஸ்தானி’ எனக் கேலி செய்தார் ஒரு நிருபர்.

மேலும் படிக்க  |  அப்போ இந்த பார்ட்னர்ஷிப் இனி இல்லையா? ரசிகர்களுக்கு ரெய்னா கொடுத்த ஷாக்..!

சீக்கியர்கள், தங்களுக்காக காலிஸ்தான் என்ற இடத்தைத் தரக்கோரி போராட்டம் நடத்தியது அனைவரும் அறிந்ததே. இதற்காக, அவர்களை மதத்தின் பேரிலும், அவர்களது கஷ்டங்களை வைத்தும் பேர் வைத்து அழைப்பது தவறு என, பலராலும், அந்த நிருபர் நிந்திக்கப்பட்டார். மேலும், அர்ஷ்தீப் சிங்கிற்கு, பல தரப்பில் ஆதரவுகள் கிளம்பி, ஒரே ஒரு கேட்சை விட்டதற்காக இவ்வளவு மோசமாக யாரையும் கேளி செய்யக் கூடாது என பலரும் கூறினர்.

Laughing At All These Tweets

இந்நிலையில், தற்போது, பாகிஸ்தான் தனது தரப்பில் இருந்தும் ஒரு மீம் போட்டு கேலி செய்ய முயற்சி செய்த போது, தானே கேளிக்கிடமாக மாறியுள்ளது. பிரபல பாகிஸ்தானிய உணவு சேவை நிறுவனமான “கரீம் பாகிஸ்தான்” என்ற நிறுவனத்தின் ட்விட்டர் பக்கத்தில், மிகவும் பிரசித்தியான இந்தி படம், ஒன்றின் டெம்ப்ளேட்டைப் பயன்படுத்தி, “இது யாரோ அழும் குரல் போல கேட்கிறதே” என, சொமாட்டோ நிறுவனத்தின் ட்விட்டரை டேக் செய்து பதிவிட்டிருந்தது. இதற்கு பல பாகிஸ்தானியர்கள் நகைச்சுவையாக பதிவிட்டிருந்தனர்.

ஆனால், சாதாரணமாகவே சொமாட்டோ கேலி செய்வதில், பிரபல காமெடி நடிகர்களான, சந்தானத்தையும், கவுண்டமணியையும் மிஞ்சும் அழகில், இந்த பதிவிற்கு பதில் பதிவிட்டு, நெட்டிசன்களின் கவனத்தைப் பெற்றுள்ளது. அந்த மீம் டெம்ப்ளேட், இந்திய படம் என்பதால், சொந்தமான பாகிஸ்தான்கிய படத்தின் டெம்ப்ளேட்டைப் பயன்படுத்தக் கேட்பது போல, “மீம் டெம்ப்ளேட்டையாவது சொந்தமானதை பயன்படுத்துங்கள்” என பதில் எழுதி மறு பகிர்வு செய்திருக்கிறது.

இதனைத் தொடர்ந்து, பலரும் அந்த ட்வீட்டை வைரலாக்கி வருகின்றனர். அது மட்டுமின்றி,”சேவேஜ்” (Savage) என கமெண்ட் செய்தும், பல மீம்களை உருவாக்கியும் வருகின்றனர்.