ஒலிம்பிக் கோல்ப் - இந்திய வீராங்கனை அதிதி அசோக் வெற்றியா?  

ஒலிம்பிக் கோல்ப் - இந்திய வீராங்கனை அதிதி அசோக் வெற்றியா?   

டோக்கியோ ஒலிம்பிக் கோல்ஃப் விளையாட்டு போட்டியில் இந்திய வீராங்கனை அதிதி அசோக், நூலிழையில் பதக்கத்தை தவற விட்டுள்ளார்.

32-வது ஒலிம்பிக் திருவிழா, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்களுக்கான கோல்ஃப் விளையாட்டு போட்டியின் தனிநபர் ஸ்ட்ரோக் பிளே பிரிவில், அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் உள்பட 60 நாடுகளை சேர்ந்த வீராங்கனைகள் பங்கேற்றனர். கடைசி மற்றும் 4-வது சுற்று போட்டியில், இந்தியாவின் அதிதி அசோக் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவருக்கு பதக்கம் வெல்லும் வாய்ப்பு பிரகாசமாக இருப்பதாக, ஒட்டுமொத்த இந்தியர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இந்நிலையில், கோல்ப் விளையாட்டு போட்டி, திடீர் மழையால் சிறிது நேரம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதனையடுத்து, மீண்டும் தொடங்கப்பட்ட கோல்ஃப் போட்டியை, 4-வது இடத்துடன் நிறைவு செய்த அதிதி அசோக், நூலிழையில் பதக்கத்தை தவற விட்டுள்ளார். கோல்ஃப் விளையாட்டு போட்டியில் தோல்வியை தழுவிய இந்திய வீராங்கனை அதிதி அசோக், கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.