"நடுவிரல் பிரச்சனை" 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஆரம்பம் !!... பாகிஸ்தான் வீரரின் செயல் சரியா..? வீடியோ

பாகிஸ்தான் அணி வீரரான தன்வீருக்கும். ஆஸ்திரேலியா வீரரான பென்  கட்டிங்குக்கும் இடையே இருந்த நடுவிரல் பஞ்சாயத்தை 4 வருடங்களுக்கு பின்னர் மீண்டும் ஆரம்பித்துள்ளார் பென்   கட்டிங்..

"நடுவிரல் பிரச்சனை" 4 வருடங்களுக்கு பிறகு மீண்டும்  ஆரம்பம் !!...  பாகிஸ்தான் வீரரின் செயல் சரியா..? வீடியோ

பாகிஸ்தானில் நடைபெறும் பாகிஸ்தான் சூப்பர் லீக் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது..

இதில் நேற்று, பெசாவார் சால்மி மற்றும் கட்டா கிளாடியேட்டர்ஸ் அணிகள் ஆடின.. இந்த போட்டியில் பாகிஸ்தான் வீரர் சோஹைல் தன்வீர் மற்றும் ஆஸ்திரேலிய வீரர் பென் கட்டிங் ஆகியோருக்கு நடந்த மோதல் தான் பெரும் பரபரப்பை ஏற்ப்படுத்தியுள்ளது...

கடந்த 2018ஆம் ஆண்டு கரீபியன் ப்ரீமியர் லீக்கில் இவர்கள் இருவரும் எதிர் எதிர் அணிகளில் விளையாடினர்.. அப்போது பென் கட்டிங் அவுட் ஆகி விட்டார்.. இதற்கு பவுலர் சோஹைல் தன்வீர் தனது 2 நடுவிரல்களையும் காட்டி அவமான படுத்தினார்.

இந்நிலையில், 4 ஆண்டு ஆண்டுகளுக்கு பின்னர் நேற்று நடந்த பிஎஸ்எல் தொடரில் தன்வீர் வீசிய 19வது ஓவரில் பென் கட்டிங் 4 சிக்ஸர்கள் விளாசினார்.. மொத்தம் 27 ரன்கள் எடுத்தார்..இதன் பிறகு தன்வீரை பார்த்து 2 நடுவிரலையும் காட்டி பழி தீர்த்து கொண்டார் பென் கட்டிங்.

இதனை பார்த்து கோபமடைந்த தன்வீர், பென் கட்டிங்குடன் மோதலில் ஈடுபட்டார்... அவர்களை அம்பர் சாமாதம் படுத்தினார்.. அம்பர் சமாதானம் படுத்தியும் இந்த பிரச்சனை தீரவில்லை... 20வது ஓவரில் நதீம் ஷா பந்து வீசினார்.. அவர் பந்து வீச பென் கட்டிங் தூக்கி அடித்தார்..

அது நேரடியாக தன்வீர் கையில் போய் சேர்ந்தது.. இதில் உற்சாகம் அடைந்த தன்வீர் மீண்டும், தனது நடுவிரல் இரண்டையும் காண்பித்து மீண்டும் பிரச்சனையை உருவாக்கினார்..  இந்த 4 வருட பிரச்சனை வீடியோ தற்போது சமூக வளைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

https://twitter.com/i/status/1493628753100132363