ஐபிஎல்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி....

கொல்கத்தாவிற்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.

ஐபிஎல்- சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடைசி பந்தில் த்ரில் வெற்றி....

நடப்பு ஐ.பி.எல் தொடரின் 38-வது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், மோர்கன் தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதின. டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. 

கொல்கத்தா அணியின் தொடக்க ஆட்டக்காரர் சுப்மன் கில் 8 ரன்களில் ரன் அவுட் ஆகி வெளியேற, மற்றொரு துவக்க ஆட்டக்காரர் வெங்கடேஷ் ஐயர் 18 ரன்னில் தாகூரின் பந்துவீச்சில் பெவிலியன் திரும்பினார். இதையடுத்து களமிறங்கிய திரிபாதி சிறப்பாக விளையாடி 45 ரன்கள் எடுத்தார். கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 171 ரன்கள் எடுத்தது.

172 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் சிறப்பான அடித்தளத்தை அமைத்து கொடுத்தனர். இதனால், சென்னை எளிதாக வெற்றி பெறும் என்றிருந்த நிலையில், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து அணி தடுமாறியது.

கடைசி 2 ஓவரில் சென்னை அணியின் வெற்றிக்கு 26 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், ஜடேஜா அதிரடியாக விளையாடி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். 20 ஓவர் முடிவில் சென்னை அணி 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து கடைசி பந்தில் த்ரில் வெற்றி பெற்றது.