மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல்; தடைவிதித்த நீதிமன்றம்!

மல்யுத்த கூட்டமைப்பு தேர்தல்; தடைவிதித்த நீதிமன்றம்!

வரும் ஜூலை மாதம் 11ஆம் தேதி நடைபெற இருந்த இந்திய மல்யுத்த கூட்டமைப்பு தேர்தலுக்கு கவுஹாத்தி உயர் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

பாலியல் குற்றம் சாட்டப்பட்ட இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷனை கைது செய்யக்கோரி வீரர்கள் தொடர் போராட்டத்தை முன்னெடுத்த நிலையில் அவரது பதவி பறிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து இந்திய மல்யுத்த சம்மேளன விவகாரங்களை சமாளிப்பதற்கும், 45 நாட்களுக்குள் புதிய தேர்தல்களை நடத்துவதற்கும் இரண்டு உறுப்பினர் அடங்கிய குழுவை விளையாட்டுதுறை அமைச்சகம் நியமித்தது. இதனையடுத்து, தேர்தல் வரும் ஜூலை 4ம் தேதி நடைபெறும் என்று இந்திய ஒலிம்பிக் சங்கம் அறிவித்த நிலையில் அதன்பின், தேர்தலை ஜூலை 11ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். 

இந்நிலையில், அசாம் மல்யுத்த சங்கம், இந்திய மல்யுத்தக் கூட்டமைப்பு மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தற்காலிக அமைப்பு மற்றும் விளையாட்டு அமைச்சகத்திற்கு எதிராக தாக்கல் செய்த மனுவின் பேரில் மல்யுத்த  சம்மேளன தேர்தலுக்கு கவ்ஹாத்தி உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. மேலும் விசாரணைக்கு அடுத்த தேதி நிர்ணயிக்கப்படும் வரை, ஒலிம்பிக் சங்கத்தின் தற்காலிக அமைப்பு மற்றும் விளையாட்டு அமைச்சகம், தேர்தலை நடத்த வேண்டாம் என்று நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

இதையும் படிக்க:செந்தில் பாலாஜிக்கு ஒரு நீதி? மக்களுக்கு வேறு நீதியா? சீமான் கேள்வி!