சிஎஸ்கே அணிக்கு வாழ்த்து சொன்ன மு.க.ஸ்டாலின்...கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

சிஎஸ்கே அணிக்கு வாழ்த்து சொன்ன மு.க.ஸ்டாலின்...கொண்டாட்டத்தில் ரசிகர்கள்!

5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்ற சென்னை அணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

16-வது ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் குஜராத் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சென்னை அணி கோப்பையை கைப்பற்றியது. இதனிடையே நெருக்கடியான சூழலை எதிர்கொண்ட ஜடேஜா, சிஎஸ்கே அணிக்கு ஒரு வரலாற்று வெற்றியை உறுதிப்படுத்தியதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரது ட்விட்டர் பக்கத்தில், ஐபிஎல் கோப்பையை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் மஞ்சள் படைக்கு வாழ்த்துக்கள் என்று பதிவிட்டுள்ளார். மேலும்  "ஒவ்வொரு சூழ்நிலைக்கும் ஒரு திட்டத்துடன் தோனி என்ற மனிதனின் கீழ் 5வது ஐபிஎல் கோப்பையை வென்ற சிஎஸ்கேயின் மஞ்சள் படைக்கு வாழ்த்துக்கள்” எனவும் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிக்க : 5 வது முறை பட்டத்தை வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி...மும்பை அணியை சமன் செய்து சாதனை!

இதனிடையே சென்னை தீவுத்திடலில் அமைக்கப்பட்ட பெரிய எல் இ டி திரையில் சென்னை - குஜராத் அணிகளின் இறுதிப்போட்டி பெரிய திரையில் ரசிகர்களுக்காக சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. சென்னையின் வெற்றி குறித்து ரசிகர்கள் கூறுகையில், மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதி போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றது அளவில்லாத மகிழ்ச்சி எனவும், கடைசி வினாடி வரை பரபரப்பாக நடைபெற்ற போட்டியில் ஜடஜா அணியை வெற்றி பெற வைத்தது மிகவும் மகிழ்ச்சி எனவும் தெரிவித்தனர்.  

மேலும் ஐந்து முறை பட்டம் பெற்று முதலிடத்தில் இருக்கும் மும்பை அணிக்கு நிகராக சென்னை அணியும் ஐந்தாவது முறை கோப்பையை வென்றது அளவில்லாத மகிழ்ச்சி எனவும் ரசிகர்கள் தெரிவித்தனர்.