சென்னையில் தீத்தொண்டு வாரம் விழிப்புணர்வு மாரத்தான்...!!  

சென்னையில் தீத்தொண்டு வாரம் விழிப்புணர்வு மாரத்தான்...!!  

தீத்தொண்டு வாரத்தை முன்னிட்டு, தமிழ்நாடு தீயணைப்பு - மீட்புப்பணிகள் துறை சார்பாக பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடைப்பெற்ற மாரத்தான் ஓட்டத்தை தீயணைப்புத் துறை வடமண்டல இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

மும்பை துறைமுகத்தில் கடந்த 1944 ஆம் ஆண்டு ஏப்ரல் 14 அன்று 1,200 டன் வெடிபொருட்களுடன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து கப்பல் வெடித்து ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்த 66 தீயணைப்பு வீரர்களின் நினைவாக நாடு முழுவதும் ஏப்ரல் 14 ஆம் தேதி தீயணைப்போர் தியாகிகள் தினம் அனுசரிக்கப்படுவதோடு ஒரு வார காலம் "தீ பாதுகாப்பு குறித்தான விழிப்புளார்வு, தேசிய உள்கட்டமைப்பின் வளர்ச்சியாகும்" என்கிற தலைப்பில் தீ பாதுகாப்பு விழிப்புணர்வு பிரசாரம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

இதனையொட்டி, தமிழ்நாடு தீயணைப்பு - மீட்புப்பணிகள் துறை சார்பாக பொதுமக்களுக்கு தீபாதுகாப்பு குறித்தான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சென்னை, பெசண்ட் நகர் பகுதியில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் 5 கி.மீ தூரத்திற்கான மாரத்தான் ஓட்டத்தை தமிழ்நாடு தீயணைப்பு - மீட்புப்பணிகள் துறை வடமண்டல இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில், குழந்தைகள், பெரியோர்கள், தீயணைப்புத் துறை அதிகாரிகள் என 100-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

இந்த மாரத்தான் ஓட்டத்தை தொடங்கி வைத்து செய்தியாளர்களை சந்தித்த, வடமண்டல இணை இயக்குநர் பிரியா ரவிச்சந்திரன், தீ பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாரத்தான் போட்டி நடைபெறுகிறது. இதில், குழந்தைகள் முதியோர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர். பொதுமக்களுக்கு  தீ பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தீ விபத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து எங்கள் தீயணைப்பு துறை அதிகாரிகள் விளக்கம் அளித்தனர் எனத் தெரிவித்தார்.

இதற்கு முன்னதாக, தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பாக தீ விபத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வது குறித்து தீயணைப்புத் துறை அதிகாரிகள் விளக்கம் பொதுமக்களுக்கு செய்முறை விளக்கம் அளித்தனர்.

இதையும் படிக்க:ஒலிம்பிக் பதக்கம் பெற நடவடிக்கை...! உதயநிதி ஸ்டாலின் பேட்டி...!!