ஒலிம்பிக் பதக்கம் பெற நடவடிக்கை...! உதயநிதி ஸ்டாலின் பேட்டி...!!

ஒலிம்பிக் பதக்கம் பெற நடவடிக்கை...! உதயநிதி ஸ்டாலின் பேட்டி...!!

ஒலிம்பிக்கில் தமிழக வீரர்கள் பதக்கம் பெற விளையாட்டு துறையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேட்டியளித்துள்ளார்.

ஆவடி காவல் ஆணையரகம் சார்பில் போதையில்லா தமிழகம் என்பதை வலியுறுத்தி போரூர் ராமச்சந்திரா மருத்துவமனை வளாகத்தில் டிரையத்லான் போட்டிகள் நடைபெற்றன. சென்னையில் முதல் முறையாக நடைபெற்ற இந்த போட்டிகளை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இதில் விளையாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்யா மிஸ்ரா, தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு,  ஆவடி காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

போதையில்லா தமிழ்நாடு என்பதை வலியுறுத்தி ஆவடி காவல் ஆணையரகம் மற்றும் இந்தியன் டிரையத்லான் பெடரேஷன் இணைந்து இந்த போட்டிகளை நடத்தினர். இதில்  750 மீட்டர் தூரம் நீச்சல் போட்டி, 20 கிலோமீட்டர் சைக்கிளிங் போட்டி , 4 கிலோ மீட்டர் ஓட்டப்பந்தயம் நடைபெற்றது.  போட்டிகளில் ஜூனியர் சீனியர் மாஸ்டர் ஆகிய மூன்று பிரிவுகளில் 350 விளையாட்டு வீரர்கள் கலந்து கொண்டனர்.


பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  தமிழக வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வெல்வதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும், அதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளையாட்டு துறையில் நான்கு மண்டலங்களாக பிரித்து நீண்ட கால திட்டமாக பல்வேறு பணிகளை செய்து வருகிறார் என்றும் கூறினார்.

இதையும் படிக்க: இந்தியாவின் எதிர்காலத்திற்காக...! சமதர்மத்தை ஏற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும்...!! முதலமைச்சர் கோரிக்கை...!!!