இந்தியாவுக்கு எதிராக ரத்தம் சொட்ட சொட்ட பந்துவீசிய ஜேம்ஸ் ஆண்டர்சன்...

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4-வது டெஸ்ட் போட்டியின் போது ஜேம்ஸ் ஆண்டர்சன் ரத்தம் சொட்ட சொட்ட பந்துவீசும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்தியாவுக்கு எதிராக ரத்தம் சொட்ட சொட்ட பந்துவீசிய ஜேம்ஸ் ஆண்டர்சன்...

இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் முதல் போட்டி டிரா ஆன நிலையில் மற்ற இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில் நான்கவது டெஸ்ட் போட்டி லண்டன் ஓவல் மைதனத்தில் நேற்று தொடங்கியது.இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி கேப்டன் ஜோ ரூட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார்.

 இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் தொடக்க வீரரான ரோகித் சர்மா 11 ரன்களிலும், கேஎல் ராகுல் 17 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தனர். புஜாரா 4 ரன்களில் வெளியேறினார். ஜடேஜா 10 ரன்களில் வெளியேறினார். கேப்டன் கோலி, 96 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ரகானே 14 ரன்களில் விக்கெட்டை பறிகொடுத்தார். ரிஷப் பண்ட் 9 ரன்களில் வெளியேறினார். ஷர்துல் தாகூர் 57 ரன்கள் எடுத்து அசத்தினார். இந்திய அணி 10 விக்கெட் இழப்பிற்கு 191 ரன்களை எடுத்து இருந்தது.

 இதன்பிறகு களமிறங்கிய இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களை அடுத்தடுத்து பும்ரா விக்கெட் எடுத்தார். இங்கிலாந்து அணியின் மிகப்பெரிய தூணாக கருதப்படும் கேப்டன் ஜோ ரூட்டை உமேஷ் யாதவ் விக்கெட் எடுத்தார். இங்கிலாந்து அணி முதல் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 53 ரன்கள் எடுத்துள்ளது.

 நேற்றைய போட்டியில் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய 42வது ஓவரின் போது அவரது முழங்கால் பகுதியில் இருந்து ரத்தம் கொட்டியது. காலில் ரத்தம் அதிகமாக வந்ததால், ஜேம்ஸ் ஆண்டர்சன் அந்த ஓவரை பாதியிலேயே நிறுத்திவிட்டு, முதலுதவி எடுக்க செல்வார் என எதிர்பார்க்கப்பட்டது. இதனையே இங்கிலாந்து வீரர்களும் ஆண்டவனிடம் வலியுறுத்தினார். ஆனால் ரத்தம் சொட்டுவதை கண்டு கொள்ளாமல் அந்த ஓவரை முழுமையாக முடித்து விட்டு சென்றார். ஆண்டர்சன் காலில் ரத்தம் சொட்ட சொட்ட பந்துவீசிய வீடியோ மற்றும் புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.