ஐபிஎல் கிாிக்கெட் போட்டி...! டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு...!!

ஐபிஎல் கிாிக்கெட் போட்டி...! டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு...!!

ஐபிஎல் கிாிக்கெட் போட்டியில் நேற்றைய ஆட்டத்தில் டெல்லி அணியை பெங்களூரு அணியும், லக்னோவை  பஞ்சாப் அணியும் வென்று வெற்றிவாகை சூடியுள்ளன. 

16-வது சீசன் ஐபிஎல் கிாிக்கெட் போட்டி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் டெல்லி கேப்பிட்டஸ் அணியை ராயல் சேலஞ்சா்ஸ் பெங்களூரு அணி எதிா்கொண்டது. முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணி வீரா்களின் அதிரடி ஆட்டத்தால் நிா்ணயிக்கப்பட்ட 20 ஓவா்களில் 174 ரன்கள் எடுத்தது.

இதையடுத்து 175 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரா்கள் எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து தங்கள் விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 151 ரன்களே எடுக்க முடிந்தது. இதன் மூலம் பெங்களூரு அணி 23 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றி பெற்றது. இதுவரை 5 ஆட்டங்களில் ஆடியுள்ள டெல்லி அணி ஒரு போட்டியில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மற்றொரு ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், லக்னோ சூப்பர் ஜெய்ண்ட்ஸ் அணியும் மோதின. இதில் முதலில் ரன் வேட்டையை தொடங்கிய லக்னோ அணி 20 ஓவர்களில் 159 ரன்கள் சேர்த்தது. பின்னா் 160 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தனது ஆட்டத்தை தொடங்கிய பஞ்சாப் அணி 19 புள்ளி 3 ஓவர்களில் 161 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. 

ஐபிஎல் போட்டியில் இன்றைய ஆட்டத்தில் மும்பை அணியை கொல்கத்தா அணியும், குஜராத் அணியை ராஜஸ்தான் ராயல்சும் எதிா்கொள்கின்றன.