இன்னும் தொடரும் மல்யுத்த வீரர்களின் போராட்டம்...!

இன்னும் தொடரும் மல்யுத்த வீரர்களின் போராட்டம்...!

பாஜகவைச் சேர்ந்த எம்.பி.யான பிரிஜ் பூஷண் சரண் சிங் இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவராக 12 ஆண்டுகளாக பதவி வகித்து வந்தார்.  இவர் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 7 மல்யுத்த வீராங்கனைகள்  குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்த நிலையில் அவரது இந்த செயலைக்  கண்டித்து கடந்த ஜனவரி 18 அன்று ஜந்தர் மந்தரில்  காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் மூன்று முறை தங்கப் பதக்கம் வென்ற வினேஷ் போகாவுடன் போராட்டம் தொடங்கியது. 28 வயதான வினேஷ் போகா கூறுகையில், தான் ஒருபோதும் இதுபோன்ற சுரண்டலை எதிர்கொண்டதில்லை என்றும், ஆனால் ஜந்தர் மந்தரில் அவர்கள் தொடங்கிய 'தர்ணா'வில்  பாதிக்கப்பட்ட பெண் இருந்தார் எனவும் கூறினார்.  மேலும், இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வினேஷ், பஜ்ரங் புனியாவுடன் சேர்ந்து மூன்று மாதங்களுக்கு முன்பு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தங்கள் பிரச்சினைகளை  முன்வைத்தார்.  ஆனால், இந்த குற்றச்சாட்டை விளையாட்டு நிர்வாகியும் பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷண் சரண் சிங் திட்டவட்டமாக நிராகரித்துள்ளார். 

பின்னர் அரசு சார்பில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டதை அடுத்து அவர்கள்  போராட்டத்தைக் கைவிட்டனர். ஆனால், அதற்கு பிறகும் அரசு சார்பில்  எந்த வித பதிலும் இல்லாத நிலையில் மீண்டும் போராட்டம் தொடங்கியது. மேலும்,  பல மல்யுத்த வீரர்களும், வீராங்கனைகளும் சாலையில் இறங்கிப் போராட்டம் மேற்கொண்டனர். அவரது இந்த செயலைக்  கண்டித்தும், அவர் மீது வழக்குப்பதிவு செய்யக்  கோரியும் கோஷங்கள் எழுப்பி கோரிக்கை வைத்தனர்.  சுமார் பத்து  நாட்களாக  இந்த போராட்டம் தொடரும் நிலையில், இன்னும் அவர் மீது  வழக்கு பதியப்படவில்லை.  

இதுஒருபுறமிருக்க, எம்.பி பிரிஜ் பூஷன் மீது மல்யுத்த வீராங்கனைகள் கூறியுள்ள புகார்கள் தீவிரமானவை என்றும், அவை நிச்சயம்  நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட வேண்டியவை என்றும்  உச்சநீதிமன்றம் கூறியும் எந்த வித முன்னேற்றமும் இல்லாமல்  இந்த போராட்டம் தொடர்கிறது. 

இந்த போராட்டம் பிரிஜ் பூஷண் சரண் சிங் மீதான மரியாதையை குலைக்கும்  நோக்கில், மல்யுத்த வீரர்களின் தனிப்பட்ட உள்நோக்கத்தோடு நடைபெறுதாகவும், பல்வேறு விமர்சனங்களும் எழுந்துள்ளது. இந்த போராட்டத்திற்கு ஆதரவாக  பல சமூக செயற்பாட்டாளர்களும் தங்களது கருத்தை தெரிவித்த வண்ணம் இருக்கின்றனர். அரசு இன்னும் போராட்டாக்காரர்களின் கோரிக்கைகளுக்கு செவி சாய்க்கவில்லை என்றும் பாஜகவைச் சேர்ந்த எம்.பி. என்பதால்  பிரிஜ் பூஷண் சரண் சிங்-ஐ  காப்பாற்ற முயற்சிப்பதாகவும் அதனாலேயே அவர் மீது எந்த வழக்கும் இன்னும் பதியப்படவில்லை என்றும் அரசாங்கத்தை சாடுகின்றனர்.

இந்த நிலையில், ஜந்தர் மந்தரில் சாலையிலேயே மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதோடு,  அவர்கள் தங்களின் அன்றாடப் பயிற்சியையும் போராட்ட களத்தில்  இருந்த படியே  செய்து கொள்கின்றனர்.  போராட்ட களத்திலிருந்து  அவர்களை அப்புறப்படுத்தவும் காவல் துறையினர் முற்பட்டநிலையில்,  இதனிடையே  ஒலிம்பிக் மல்யுத்த  வீரரான பஜ்ரங் புனியா  செய்தியாளர்களிடம் கூறுகையில், "பிரிஜ் பூஷண் சரண் சிங் மீது இன்னும்  வழக்கு பதிவு செய்யப்படாத நிலையில் காவல்துறையினர் எவ்வாறு தங்களை போராட்டத்தில் ஈடுபடாமல் தடுக்கவோ பயிற்சி எடுத்துக்கொள்ள அனுமதி மறுக்கவோ இயலும் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். 


இதையும் படிக்க    }  பிரதமர் நிதிக்கு ஏன் தணிக்கை இல்லை? - காங்கிரஸ் கேள்வி!