போட்ரா தம்பி பிரேக்க...ரயிலை நிறுத்திய ஓட்டுநர்!!தலையில் தட்டி தூக்கிய போலீசார்

ரயில் தண்டவாளத்தில் உயிரை மாய்த்து கொள்வதற்காக படுத்திருந்த நபரை காப்பாற்ற திறமையாக ரயிலை நிறுத்திய வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

போட்ரா தம்பி பிரேக்க...ரயிலை நிறுத்திய ஓட்டுநர்!!தலையில் தட்டி தூக்கிய போலீசார்

மனிதன் தன் உயிரை துட்சமாக நினைத்து வாழ பிடிக்கவில்லை என்றால் மருந்து குடிப்பது, தூக்கில் தொங்குவது, ரயில் தண்டவாளத்தில் ஊயிரை போக்குவது என்று இப்படியான வழிகளில் உயிரை மாய்த்து வருகின்றனர். அந்த வகையில் மும்பையில் ஒரு நபர் தற்கொலைக்கு முயன்று தண்டவாளத்தில் தலைவைத்து படுத்திருந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் எப்போதும் பயணிகள் ரயில் சேவை பரபரப்பாக இருக்கும். இந்த நிலையில் நேற்று காலை 11.45 மணி அளவில், அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ரயில் தண்டவாளம் அருகே சிறிது நேரம் நின்றுள்ளார். பின்னர் ரயில் அருகில் வருவதை கண்டு தண்டவாளத்தில் தலைவைத்து படுத்துக்கொண்டார்.

ஆனால், ரயில் அருகில் வந்த உடனே ஒருவர் படுத்திருப்பதை அறிந்த ரயில் ஓட்டுநர் சட்டென்று பிரேக்கை அழுத்தி ரயிலை நிறுத்திவிட்டார். இதனால் பயணிகள் அனைவரும் அச்சமடைந்தனர். இது குறித்து அறிந்த ரயில்வே போலீசார் உடனடியாக ஓடிவந்து படுத்திருந்த நபரை பொடணியில் தட்டி தூக்கி காப்பாற்றினர். இந்த வீடியோவை பகிர்ந்த ரயில்வே அமைச்சகம் ஓட்டுநரை பாராட்டி, மக்களின் உயிர் விலைமதிப்பற்றது என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இணையத்தில் வைரலான இந்த வீடியோவை இதுவரை 93,000 பேர் பார்த்துள்ளனர். 5,700 பேர் விருப்பம் தெரிவித்து பலரும் ரயில் ஓட்டுநரை பாராட்டி வருகின்றனர். மேலும், ரயில் தண்டவாளத்தில் தலைவைத்து படுத்து தற்கொலைக்கு முயன்றவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. எனினும் அவர் தற்கொலை செய்வதற்காக அவ்வாறு செய்தாரா அல்லது குடி போதையில் செய்தாரா என்ற தகவல் இதுவரை வெளியிடப்படவில்லை.