மாணவர்கள் உயிருடன் விளையாட்டா..? ஆந்திர அரசிற்கு உச்சநீதிமன்றம் கேள்வி...

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்யாத ஆந்திர அரசிற்கு உச்சநீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.

மாணவர்கள் உயிருடன் விளையாட்டா..? ஆந்திர அரசிற்கு உச்சநீதிமன்றம் கேள்வி...
12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை ஆந்திர அரசு இதுவரை ரத்து செய்யாத நிலையில், மாணவர்களுடன் உயிருடன் விளையாடுகிறீர்களா? என உச்சநீதிமன்றம் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளது.
 
அம்மாநிலத்தில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் 12ம் வகுப்பு தேர்வு எழுதவுள்ள நிலையில், மொத்தமுள்ள 34 ஆயிரம் வகுப்பறைகளில் மாணவர்களை பாதுகாப்பு இடைவெளியுடன் அமரவைக்க, எந்த மாதிரியான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது எனவும் விளக்கமளிக்க உத்தரவிட்டுள்ளது. 
 
மேலும் ஜூலை மாதத்திற்கு தேர்வுகளை ஒத்திவைக்க முடிவெடுத்த அரசுத்துறை அதிகாரிகள் குறித்தும் அறிக்கை தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளது. மாணவர்கள் யாராவது தொற்றினால் உயிரிழந்தால் ஒரு கோடி ரூபாய் இழப்பீடு தொகையாக வழங்க நேரிடும் எனவும் ஆந்திர மாநில அரசை எச்சரித்துள்ளது.