மணிப்பூர் கலவரம் : முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட பிரதமர் மோடி!

மணிப்பூர் கலவரம் : முக்கிய ஆலோசனையில் ஈடுபட்ட பிரதமர் மோடி!

மணிப்பூர் மாநில கலவரம் தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார்.


பா.ஜ.க. ஆளும் மணிப்பூர் மாநிலத்தில் இருவேறு சமூக மக்களிடையே ஏற்பட்ட மோதல் கலவரமாக வெடித்ததால் 120-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஏராளான வீடுகள் தீக்கிரையான நிலையில், ஆயிரக்கணக்கானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மணிப்பூரில் அமைதி திரும்ப மத்திய மாநில அரசுகள் மேற்கொண்ட இன்டர்னெட் சேவை ரத்து உள்ளிட்ட முயற்சிகள் பயனளிக்கவில்லை.  

நாடு முழுவதும் மணிப்பூர் கலவரம் பூதாகரமானதை அடுத்து 50 நாட்களை கடந்து நடைபெற்று வரும் கலவரம் குறித்து பேசாமல் பிரதமர் மவுனம் காப்பதாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் குற்றம் சாட்டின. 

இதையும் படிக்க : சர்வதேச போதை ஒழிப்பு தினம்; பள்ளி மாணவர்கள் பேரணி!

இந்நிலையில், அமெரிக்கா, எகிப்து பயணத்தை முடித்துக் கொண்டு நாடு திரும்பிய பிரதமர், உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட அமைச்சர்களுடன் முக்கிய ஆலோசனையில் ஈடுபட்டார். பிரதமர் இல்லத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மணிப்பூர் மாநிலத்தின் தற்போதைய நிலை குறித்து உள்துறை அமைச்சர் அமித் ஷா எடுத்துரைத்தார்.

முன்னதாக, அமித் ஷா தலைமையில் மணிப்பூர் கலவரம் குறித்து அனைத்துக் கட்சிக் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.