பனாமா பேப்பர்ஸ் விவகாரம்...அமலாக்கதுறை முன்பு நடிகை ஐஸ்வர்யா ராய் ஆஜர்...!!

சட்டவிரோத அந்நிய முதலீடு தொடர்பாக நடிகை ஐஸ்வர்யா ராய் டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். 

பனாமா பேப்பர்ஸ் விவகாரம்...அமலாக்கதுறை முன்பு நடிகை ஐஸ்வர்யா ராய் ஆஜர்...!!

கடந்த 2015-ம் ஆண்டு 80 நாடுகளை சேர்ந்த 107 ஊடகவியலாளர்கள் ஜெர்மனியை சேர்ந்த ஊடகத்துடன் இணைந்து ரகசிய புலனாய்வு நடத்தினர். இதில் 1 கோடிக்கும் அதிகமான பனாமா நாட்டைச் சேர்ந்த மொசாக் பென்செக்கா என்ற சட்ட நிறுவனத்தின் ரகசிய ஆவணங்களை வெளியிட்டது.

வெளிநாடுகளில் வரி ஏய்ப்பு செய்வதற்கும் பொருளாதாரத் தடைகளை மறைத்து சொத்துகளை வாங்குவதற்கும் வசதி செய்து கொடுப்பதுதான் "பென்செக்கா" நிறுவனத்தின் பணி என்ற விவரம் வெளிவந்தது.

இவை சர்வதேச அளவில் பெரும் சர்ச்சையை உண்டாக்கிய நிலையில் இந்தியாவை சேர்ந்த 500 க்கும் மேற்பட்ட பிரபலங்களும், பிறநாடுகளை சேர்ந்த பிரபலங்கள், பல நாடுகளின் தலைவர்கள், தொழிலதிபர்கள்,  நடிகர், நடிகைகள், கார்ப்பரேட் நிறுவனங்கள் உள்ளிட்டவைகளும் இந்த பனாமா பேப்பர்ஸ் ஆவணங்களில் சிக்கின.

இவர்கள், பொருளாதார தடைகளை மறைத்து வெளிநாடுகளில் சட்ட விரோதமாக முதலீடு செய்தனர். அந்தந்த நாடுகளின் விசாரணை அமைப்பு இது தொடர்பாக விசாரணை நடத்த தொடங்கிய நிலையில், இந்தியாவில் அமலாக்கத்துறை விசாரணை செய்து வருகிறது.

இதற்கிடையில் பனாமா பேப்பர்ஸ் விவகாரத்தில் உலக அழகியும், பாலிவுட் நடிகர் அமித்தா பட்சனின் மருமகளுமான ஐஸ்வர்யா ராயிடம் விசாரணை நடத்த 2 முறை அவருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது. ஆனால் 2 முறையும் அவர் தனக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். இந்நிலையில் 3வது முறையாக சம்மன் அனுப்பட்ட நிலையில் இன்று டெல்லியில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் நேரில் ஆஜரானார். 

விசாரணையின் போது சட்ட விரோத அந்நிய முதலீடு தொடர்பான விளக்கங்கள் கேட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.