நடிகை ரோஜாவின் பதவியை பறித்து அதிரடி காட்டிய ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திராவில், தொழில்துறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவர் பதவியில் இருந்து, நடிகை ரோஜா அதிரடியாக நீக்கம் செய்யப்பட்டுள்ளது ஆந்திர அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை ரோஜாவின் பதவியை பறித்து அதிரடி காட்டிய ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திராவில் முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்., காங்கிரஸ் ஆட்சி நடைபெற்று வருகிறது. தேர்தலில் நகரி தொகுதியில் வெற்றி பெற்ற திரைப்பட நடிகை ரோஜா, அமைச்சராக நியமிக்கப்படுவார் என அனைவராலும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு ஆந்திராவின் தொழில்துறை மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டு கழக தலைவர் பதவி வழங்கப்பட்டது.

 இந்நிலையில், அப்பதவியில் இருந்து ரோஜா நீக்கப்பட்டு, புதிய தலைவராக மேட்டு கோவிந்த ரெட்டி நியமிக்கப்பட்டு உள்ளார். சமீபத்தில் புத்துார் மற்றும் நகரி நகராட்சி தேர்தல்களில் கட்சி வேட்பாளர்களை எதிர்த்து பலரும் களம் இறங்கியதற்கு, ரோஜாவின் நடவடிக்கைகள் காரணம் என புகார் கூறப்பட்டதால், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.