இந்திய நெடுஞ்சாலைகள் அமெரிக்காவிற்கு இணையான தரத்திற்கு உயர்த்தப்படும் : நிதின் கட்கரி

அடுத்த 3 ஆண்டுகளில் இந்திய நெடுஞ்சாலைகள் அமெரிக்காவிற்கு இணையான தரத்திற்கு உயர்த்தப்படும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.

இந்திய நெடுஞ்சாலைகள் அமெரிக்காவிற்கு இணையான தரத்திற்கு உயர்த்தப்படும் : நிதின் கட்கரி

குஜராத் பனாஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள தீசா பகுதியில் புதிதாக 3 புள்ளி 75 கிலோ மீட்டர் தூரத்திற்கு 4 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. இதனை காணொலி வாயிலாக மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி ஆகியோர் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தனர்.

அப்போது பேசிய நிதின் கட்கரி, பிரதமர் மோடி தலைமையில் நெடுஞ்சாலை அமைக்கும் பணி படுவேகத்தில் நடந்து வருவதாக குறிப்பிட்டார். ஏற்கனவே நாளொன்றுக்கு 2 கிலோ மீட்டர் சாலை அமைக்கப்பட்டதற்கு பதில், தற்போது நாளொன்றுக்கு 38 கிலோ மீட்டர் தூரத்திற்கு சாலை அமைக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இந்திய நெடுஞ்சாலைகள் அமெரிக்க சாலைகளின் தரத்திற்கு தரம் உயர்த்தப்படும் எனவும் அவர் கூறினார்.