G20 2ஆம் நாள்: காந்தி நினைவிடத்திற்கு ஜி20 நாடுகளின் தலைவர்கள் வருகை...!

G20 2ஆம் நாள்: காந்தி நினைவிடத்திற்கு ஜி20 நாடுகளின் தலைவர்கள் வருகை...!

ஜி 20 மாநாட்டின் இரண்டாம் நாளான இன்று பல்வேறு நாடுகளின் தலைவர்கள் டெல்லியில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினர்.

ஜி20 நாடுகள் அமைப்பின் உச்சி மாநாடு இந்தியாவின் தலைமையில் டெல்லியில் நடைபெற்று வருகிறது. பிரகதி மைதானத்தில் நேற்று தொடங்கிய மாநாட்டின் முதல் நாளில் ஆப்பிரிக்க ஒன்றியம் அதிகாரப் பூர்வ உறுப்பினரானது. தொடர்ந்து உக்ரைன் விவகாரம் குறித்து கூட்டறிக்கை வெளியிடப்பட்டது.

தொடர்ந்து இன்று இரண்டாம் நாள் மாநாடு நடைபெறவுள்ளது. முன்னதாக ஜி20 நாடுகளின் தலைவர்கள் மற்றும் பல்வேறு  அமைப்புகளின் தலைவர்கள் ஒன்று சேர்ந்து மகாத்மா காந்தி நினைவிடத்தில் 45 நிமிடங்கள் மரியாதை செலுத்தவுள்ளார். இதற்காக காந்தி நினைவிடத்திற்கு சென்றவர்களை பிரதமர் நரேந்திர மோடி சால்வை அணிவித்து வரவேற்றார்.

இதையும் படிக்க : செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு நாளை விசாரணைக்கு பட்டியல்...!

ஐ.நா.பொதுச் செயலாளர் ஆண்டனியோ குட்ரெஸ், உலக வங்கித் தலைவர் அஜர் பங்கா,  ஆசிய வளர்ச்சி வங்கி தலைவர் மசாட்சுகு அசாகவா, சர்வதேச நாணய நிதிய தலைவர் கிரிஸ்டாலினா ஜியார்ஜிவா, உலக சுகாதார நிறுவன தலைவர் டெட்ரோஸ் அதானம் ஆகியோரை பிரதமர் வரவேற்றார்.

தொடர்ந்து, ஓமன் துணைப் பிரதமர் ஆசாத் பின் தரிக் பின் தைமூர் அல் சைத், பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா, எகிப்து அதிபர் அப்துல் பட்டா அல் சிசி ஆகியோர் ராஜ்கட்டிற்கு வருகை தந்துள்ளனர்.