ராகுல் காந்தி தலைவராக வேண்டும்…புதுச்சேரி காங்கிரஸ் தீர்மானம்!

காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம் கட்சியின் தேர்தல் அதிகாரியும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிபி ஈடன் முன்னிலையில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

ராகுல் காந்தி தலைவராக வேண்டும்…புதுச்சேரி காங்கிரஸ் தீர்மானம்!

காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவராக மீண்டும் ராகுல் காந்தியே பதவியேற்க வேண்டும் என புதுச்சேரி காங்கிரஸ் கட்சி சார்பில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

காங்கிரஸ் ஆலோசனைக் கூட்டம்

புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சியின் தேர்தல் ஆலோசனைக் கூட்டம் மாநில காங்கிரஸ் கட்சி தேர்தல் அதிகாரியும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹிபி ஈடன் முன்னிலையில் வைசியால் வீதியில் உள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

தலைவர் பதவியேற்க தீர்மானம்

முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி, மாநிலத் தலைவர் ஏ.வி. சுப்பிரமணியன், துணைத் தலைவர் அனந்தராமன், சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட புதுச்சேரியின் 30 தொகுதிகளிலும் தேர்வு செய்யப்பட்டுள்ள மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

கூட்டத்தில் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை மீண்டும் ராகுல் காந்தியே ஏற்றுக் கொள்ள வேண்டும் என புதுச்சேரி மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.