இந்திய – சீன படைகள் விலக்கப்பட்டதா?

இந்திய – சீன படைகள் விலக்கப்பட்டதா?

ஜம்மு - காஷ்மீரின் சர்ச்சைக்குரிய கிழக்கு லடாக் பகுதியிலிருந்து, இந்தியா மற்றும் சீன நாடுகள் படைகளை விலக்கி கொள்ளப்பட்டுள்ளன. கடந்த 2020ஆம் ஆண்டு அத்துமீறி இந்திய எல்லைக்குள் சீனா நுழைந்தது. அதுமுதல் இரு தரப்பு சார்பிலும் எல்லைகளில் படைகள் குவிக்கப்பட்டு பதற்றமான சூழல் நிலவுகிறது.

இதைத்தொடர்ந்து சீனாவுடன், ராணுவ மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தி வரும் இந்தியா, படைகளை விலக்கி கொள்ள கேட்டுக்கொண்டு வந்தது. அந்தவகையில் 16வது சுற்று பேச்சுவார்த்தை பயனளிக்கவே, கிழக்கு லடாக்கின் எல்லை கட்டுப்பாடு அருகேவுள்ள கோக்ரா- ஹாட் ஸ்பிரிங்ஸ் பகுதியில் இருந்து இரு தரப்பு படைகளும் விலக்கி கொள்ளப்பட்டன.