டெல்லியில் வாட்டி வதைக்கும் வெப்பம்.. ஏப்.28, 29ல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வலியுறுத்தல்!!

டெல்லியில் வாட்டி வதைக்கும் வெப்பம்.. ஏப்.28, 29ல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என வலியுறுத்தல்!!

வடமாநிலங்களில் கடுமையான வெப்பம் வாட்டி வரும் நிலையில் டெல்லியில் ஏப்ரல் 28 மற்றும் 29 தேதிகளில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

டெல்லியில் மேகமூட்டமான சூழல் தென்பட்டாலும் மேற்கு திசையில் இருந்து வீசும் வெப்ப காற்றால் பல்வேறு பகுதிகளில் 39 முதல் 42 டிகிரி செல்ஷியஸ் வரை வெப்பம் பதிவாகியுள்ளது. இதனால் பொதுமக்கள் வெளியே வர முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர்.

இந்நிலையில், வெப்பம் மேலும் அதிகரிக்கும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 27 மற்றும் 28 தேதிகளில் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.