இன்னும் இரண்டே ஆண்டுகளில் ஜம்மு- காஷ்மீரில் இருந்து தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு விடும்: துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா

இன்னும் இரண்டே ஆண்டுகளில் ஜம்மு- காஷ்மீரில் இருந்து தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு விடும் என துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா உறுதியளித்துள்ளார்.

இன்னும் இரண்டே ஆண்டுகளில் ஜம்மு- காஷ்மீரில் இருந்து தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு விடும்: துணை நிலை ஆளுநர் மனோஜ் சின்ஹா

சமீபகாலமாக ஜம்மு- காஷ்மீரில் தீவிரவாதிகளின் தாக்குதல் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. இந்நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஆளுநர் மனோஜ் சின்ஹா, ஜம்மு-காஷ்மீரின் சட்டம்-ஒழுங்கு நிலை குறித்து பலர் கவலைப்படுவதாக குறிப்பிட்ட அவர், இன்னும் இரண்டே ஆண்டுகளில் ஜம்மு-காஷ்மீரில் இருந்து தீவிரவாதம் ஒழிக்கப்பட்டு விடும் என்றும், அதற்கான அனைத்து நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருவதாகவும் கூறினார். லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பை சேர்ந்த 38 பாகிஸ்தான் தீவிரவாதிகள் ஜம்மு- காஷ்மீரில் தீவிரமாக செயல்பட்டு வருவதாகவும், அவர்களுக்கு எதிரான நடவடிக்கையை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளதாகவும் கூறினார்.