வேரற்ற மரமா காங்கிரஸ்!!- ஜெய்ராம் விமர்சனம்

வேரற்ற மரமா காங்கிரஸ்!!- ஜெய்ராம் விமர்சனம்

இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் ஜெய் ராம் தாக்கூர் மண்டியில் உள்ள சர்காகாட்டில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்துள்ளார். இமாச்சல பிரதேசம் உருவானதன் 75வது ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், எதிர்க்கட்சிகளை கடுமையாக தாக்கி பேசியுள்ளார். 

நலத்திட்ட பணிகள்:

மண்டி நகருக்குச் செல்லும் சாலைகளை முறையாக பராமரிப்பதை உறுதி செய்யுமாறு மாநில பொதுப்பணித் துறை அதிகாரிகளுக்கு முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.  மண்டி நகரிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் பேருந்துகள் மற்றும் பிற வாகனங்களுக்கு போதுமான அளவில் நிறுத்தங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படாத வகையில், சீரான மற்றும் தடையின்றி வாகனங்கள் செல்வதை உறுதி செய்ய வேண்டும் எனவும் ஜெய்ராம் தாக்கூர் கூறியுள்ளார்.

பிரதமர் பயணம்:

முன்னதாக செப்டம்பர் 17ஆம் தேதி மாண்டியில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் மோடியின் அரசு பயணத்திற்கான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. ஜெய்ராம் தாக்கூர், நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்த விரிவான ஏற்பாடுகளை செய்ய அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பிரதமர் மோடி செப்டம்பர் 24-ம் தேதி மாண்டிக்கு வர இருக்கிறார்.  மாநில சட்டசபை தேர்தலுக்கு முன், இமாச்சல பிரதேச இளைஞர்களிடையே உரையாற்றுவதற்காக, பிரதமர் மோடி, மாண்டிக்கு செல்ல இருக்கிறார்.

'மீண்டும் தேர்தலில் வெற்றி பெறுவோம்':

முதலமைச்சர் தாக்கூர் கூறுகையில், ”பிரதமர் நரேந்திர மோடி வந்து, உரையாற்றுவார், வழிகாட்டுவார், அவரது தலைமையில் மீண்டும் புதிய ஆற்றலுடன் தேர்தலில் போராடுவோம், வரும் சட்டசபை தேர்தலில் நிச்சயம் வெற்றி பெறுவோம்” என்று கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிகளைத் தாக்கிய தாக்கூர்:

ஜெய்ராம் தாக்கூர், ”எனது எதிர்க்கட்சி சகாக்களைப் பார்க்கிறேன், இப்போதெல்லாம் எங்கள் கூட்டணியில் அவர்களுக்கு மிகப்பெரிய பிரச்சனை உள்ளது. எங்கள் கூட்டணியின் ஆட்சி டெல்லியில் அமைக்கப்பட்டுள்ளது, அது ஹிமாச்சலிலும் உள்ளது. நீங்கள் வேரோடு பிடுங்கப்பட்டால், அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்? அவர்களது ஆட்சி அடுத்த 20-25 ஆண்டுகளுக்கு அமையப் போவதில்லை.” எனக் கூறியுள்ளார்.

இதையும் படிக்க:  குஜராத்தில் பாஜகவின் ஆட்டத்தைக் கலைக்குமா ஆஆக!!