"லண்டனில் ராகுல் காந்தி பேசியது தேசத்திற்கே அவமானம்"- மத்திய அமைச்சர்கள்...

நாடாளுமன்றத்தில் ஆளுங்கட்சியும் எதிர்க்கட்சியும் மாற்றி மாற்றி குற்றஞ்சாட்டிக் கொண்டதால் நேற்று நாள் முழுவதும் இரு அவைகளும் ஒத்தி வைக்கப்பட்டன.

"லண்டனில் ராகுல் காந்தி பேசியது தேசத்திற்கே அவமானம்"- மத்திய அமைச்சர்கள்...

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ம் அமர்வு நேற்று தொடங்கி ஏப்ரல் 6ம் தேதி வரை நடைபெறுகிறது. அதில், எழுப்ப வேண்டிய கேள்விகள் குறித்து முன்னதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தலைமையில் எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்தினர். தொடர்ந்து மக்களவையும் மாநிலங்களவையும் தொடங்கிய நிலையில், ஆரம்பம் முதலே CBI, அமலாக்கத்துறையினரின் ரெய்டு தொடர்பாக எதிர்கட்சிகள் முழக்கம் எழுப்பினர். 

மேலும் படிக்க | லண்டனில் ராகுல்... இந்தியாவை அவதூறு செய்பவர் இந்தியப் பிரதமரே...!!!

இதைத்தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர்கள் பியூஷ் கோயல் மற்றும் ராஜ்நாத்சிங் உள்ளிட்டோர், ராகுல்காந்தி லண்டனில் ஜனநாயகம் குறித்துப் பேசியது தேசத்திற்கே அவமானம் என குறிப்பிட்டனர். இந்திய மக்களிடம் ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் எனவும் ஆளுங்கட்சி எம்பிக்கள் அடுத்தடுத்து குரலெழுப்பினர்.

மேலும் படிக்க | நீங்கள் உளவு பார்க்கப்படுகிறீர்கள்... உரையாடல் பதிவு செய்யப்படுகிறது... !!

பிறகு பேசிய மல்லிகார்ஜூன கார்கே, மத்தியப் புலனாய்வு அமைப்புகளின் ரெய்டு தொடர்பாக பதிலளிக்குமாறும் பிபிசி பிரச்னை உள்ளிட்டவை குறித்தும் கேள்வியெழுப்பினார். இதனால் அவையில் பெரும் அமளி ஏற்பட்டது. இதையடுத்து இரு அவைகளையும் நேற்று நாள் முழுவதும் ஒத்தி வைத்து குடியரசுத் துணைத் தலைவர் ஜக்தீப் தன்கர் அறிவித்தார். 

மேலும் படிக்க | அதானி விவாதத்தை நிராகரிக்கும் மத்தியஅரசு...குற்றம் சாட்டும் மல்லிகார்ஜூன கார்கே!

இந்த நிலையில், தற்போது கூடியிருக்கும் பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வில் 35 மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. ஆனால், ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் தொடர்ந்து குற்றஞ்சாட்டி அமளியில் ஈடுபட்டு வருகின்றன. இதனால் நாடாளுமன்ற பணிகள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. 

மேலும் படிக்க | திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற அவைகள்...!காரணம் இதோ...