திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற அவைகள்...!காரணம் இதோ...

திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்ட நாடாளுமன்ற அவைகள்...!காரணம் இதோ...

அதானி குழும விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.

அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சியினர்:

நடப்பாட்டிற்கான நிதிநிலை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மூன்றாம் நாளாக இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியது. இந்த நிலையில், பங்குச்சந்தையில் மோசடியில் ஈடுபட்டதாக ஹிண்டர்பெர்க் ஆய்வு நிறுவனம் குற்றம் சாட்டிய அதானி குழுமம் தொடர்பாக, எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. ஆனால் கூட்டத்தை நடத்த ஒத்துழைப்பு வழங்குமாறு மக்களவையில் சபாநாயகர் ஓம்பிர்லா, அவை உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார். எனினும் கூச்சல் குழப்பம்  நீடித்ததால் மக்களவை 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 

இதையும் படிக்க : ஒரே வேட்பாளர்... அதுதான் பாஜாகவின் நிலைப்பாடு...!

திங்கட்கிழமை வரை ஒத்திவைப்பு :

இதேபோல்  மாநிலங்களவையிலும் எதிர்கட்சிகளின்  அமளி நீடித்தது. இதனால் பிற்பகல் 2.30 மணி வரை ஒத்தி வைக்கப்பட்டு, அவை கூடியது. அப்போது மீண்டும் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மாநிலங்கவையும் திங்கட்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.