டெல்லி - ஜெய்பூரை இணைக்கும் முதல் சாலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி...!

டெல்லி - ஜெய்பூரை இணைக்கும் முதல் சாலையை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி...!

டெல்லியில் இருந்து மும்பை வரை அமைக்கப்பட்டு வரும் இந்தியாவின் மிக நீண்ட விரைவுச்சாலையின் முதல் பகுதியை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். 

தேசிய தலைநகரான டெல்லியையும், பொருளாதார தலைநகரான மும்பையையும் இணைக்கும் எட்டுவழிச் சாலை சுமார் 12 ஆயிரத்து 150 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது. ஆயிரத்து 386 கிலோமீட்டர் நீளத்தில், இந்தியாவின் மிக நீண்ட விரைவுச் சாலையாக உருவாகும் இந்த சாலையின் முதல் கட்டுமானப் பணிகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து டெல்லியையும் ஜெய்பூரையும் இணைக்கும் முதல் பகுதி சாலையை இன்று பிரதமர் மோடி திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். 

இதையும் படிக்க : கழுதையா? ஆடா? மாநிலங்களவையில் நிகழ்ந்த கலகலப்பான விவாதம்...இறுதியில் ஜெயிச்சது யார்?

இதன் மூலம் டெல்லிக்கும் ஜெய்பூருக்கும் இடையிலான 5 மணி நேர பயண நேரம் 3 மணி நேரமாக குறையும் என்று கூறப்படுகிறது. மேலும், மும்பையைத் தொடும் இந்த விரைவுச்சாலை டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாவட்டங்களை இணைக்கும் என்றும் கூறப்படுகிறது. இந்த விரைவுச்சாலை விரைவில் 12 வழிச் சாலையாகவும் விரிவாக்கப்பட உள்ளதாக நெடுஞ்சாலைத்துறையினர் தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் இந்தியாவின் மிக நீண்ட விரைவுச்சாலையின் முதல் பகுதியை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். இதைத் தொடர்ந்து கர்நாடகா செல்லும் பிரதமர், அங்கு 18 ஆயிரத்து 100 கோடி மதிப்புள்ள சாலைத் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. தொடர்ந்து 14-வது ஏரோ இந்தியா நிகழ்ச்சியையும் அவர் தொடங்கி வைக்கிறார்.