ககன்யான் திட்டத்தால் வேலை வாய்ப்புகள், வர்த்தகம் பெருகும்...நம்பிக்கை தெரிவித்தார் இஸ்ரோ தலைவர்!

ககன்யான் திட்டத்தால் வேலை வாய்ப்புகள், வர்த்தகம் பெருகும்...நம்பிக்கை தெரிவித்தார் இஸ்ரோ தலைவர்!

மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தின் மூலம் அதிக வேலை வாய்ப்புகள் மற்றும் வர்த்தகம் பெருகும் என இஸ்ரோ தலைவர் சோம்நாத் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிஎஸ்எல்வி C - 55 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது குறித்து செய்தியாளர்களை சந்தித்த இஸ்ரோ தலைவர் சோம்நாத், மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டப் பணிகள் நடைபெற்று வருவதாகவும், 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் ககன்யான் திட்டத்திற்கான முழுமையான சோதனை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.

இதையும் படிக்க : 12 மணிநேர வேலை திருத்த சட்டம்... கண்டனம் தெரிவித்த எடப்பாடி...!

தொடர்ந்து பேசிய அவர், பிஎஸ்எல்வி C - 55 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்ட நிகழ்வு தங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிப்பதாகவும், மனிதர்களை விண்ணுக்கு அனுப்பும் திட்டத்தின் மூலம் அதிக வேலை வாய்ப்புகள் மற்றும் வர்த்தகம் பெருகும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார். மேலும் ஏற்கனவே, ஆதித்யா ராக்கெட் விண்ணில் ஏவப்பட்ட நிலையில், திரவ எரிபொருள் மூலம் இயங்கும் ராக்கெட் அடுத்த கட்டமாக விண்ணில் ஏவப்பட உள்ளதாகவும் இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்.