கேரளாவுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை..!

கேரளாவுக்கு 2-ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை..!

முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியை எட்டியிருப்பதால் கேரள பகுதிகளுக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை:

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. வங்கக் கடலில் உருவாகும் காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழகத்தின் பல மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக தமிழகத்தில் உள்ள அணைகளும் ஏரிகளும் நிரம்பி வருகின்றன. அதேபோல் முல்லை பெரியாறு அணை பகுதிகளிலும் தொடர் மழை காரணமாக முல்லை பெரியாறு அணை நிரம்பி வருகிறது. இதன் காரணமாக சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் முதற்கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

இதையும் படிக்க: கலவரமாக மாறிய போராட்டம்...விளக்கம் அளிக்க உத்தரவிட்ட தமிழக காங்கிரஸ்!

இரண்டாம் கட்ட எச்சரிக்கை:

இந்நிலையில், இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்வரத்து ஆயிரத்து 542 கன அடியாக உள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 138 அடியாக உயர்ந்துள்ளது.  ருல்கர்வ் என்ற முறைப்படி வருகிற 20 ஆம் தேதி வரை அணையின் நீர்மட்டத்தை 141 அடி வரை உயர்த்திக்கொள்ள முடியும். அதன் பிறகு அணைக்கு வரும் நீரை கேரள பகுதிக்கு திறந்துவிட வேண்டிய நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக கேரள பகுதிக்கு இரண்டாம் கட்ட வெள்ள அபாயா எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.