வட மாநிலங்களில் வாட்டி வதைக்கும் குளிர்... மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...

வட மாநிலங்களில் வாட்டி எடுக்கும் குளிர் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது.

வட மாநிலங்களில் வாட்டி வதைக்கும் குளிர்... மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு...

வடக்கு பாகிஸ்தான் அருகே மேலடுக்கு சுழற்சி நிலவி வரும் நிலையில், மேற்கத்திய காற்றும் வீசுவதால் இந்தியாவின் வட மாநிலங்களில் குளிர்ந்த காற்று வீசுகிறது. இதனால் பல இடங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. கடுமையான குளிர் காரணமாக இமாச்சல பிரதேசத்தில் உள்ள சிசு ஏரி உறைந்தது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. காஷ்மீர் பள்ளத்தாக்கில் பல இடங்களில் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கும் கீழ் பதிவானது. ஸ்ரீநகர் உள்ளிட்ட சில இடங்களில் வெப்பநிலை மைனஸ் 6 டிகிரி செல்சியஸ் அளவாக இருந்தது.  

இந்த குளிரிலும் பல மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் ஸ்ரீநகருக்கு வருகை தருகின்றனர். ராஜஸ்தானில் குறைந்தபட்ச வெப்பநிலை மைனஸ் ஒரு டிகிரி செல்சியஸ் அளவாக பதிவான நிலையில், காலையில் பல இடங்களில் அடர்ந்த பனிமூட்டம் காணப்பட்டது. பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ், மொரதாபாத்தில் பகுதிகளில் வாட்டி எடுக்கும் குளிரை சமாளிக்க பொதுமக்கள் சாலைகளில் நெருப்பு மூட்டு குளிர் காய்ந்தனர். அதே சமயம் வரும் டிசம்பர் 21 ஆம் தேதி வரை பஞ்சாப், சண்டிகர், அரியானா, ராஜஸ்தான், உத்தரகாண்ட், குஜராத் உள்ளிட்டமாநிலங்களில் குளிர் காற்று வீசும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.