இடிந்து விழுந்த ஐந்து மாடி கட்டடம் ...  முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர் சேதம் தவிர்ப்பு...

பெங்களூருவில் ஐந்து மாடி கட்டடம் இடிந்தது. குடியிருப்புவாசிகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இடமாற்றம் செய்யப்பட்டதால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

இடிந்து விழுந்த ஐந்து மாடி கட்டடம் ...  முன்னெச்சரிக்கை நடவடிக்கையால் உயிர் சேதம் தவிர்ப்பு...

பெங்களூரு கஸ்துாரி நகர் இரண்டாவது கிராசில், வி.ஜே., இன்பினிட்டி அபார்ட்மென்ட் உள்ளது. ஐந்து மாடி கட்டடமான இதில் சில குடும்பத்தினர் வசித்து வந்தனர். சில நாட்களுக்கு முன் கட்டடத்தின் அடித்தளம் சேதம் அடைந்த நிலையில் இருந்தது. இது குறித்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அதில் குடியிருந்தவர்கள் வேறு இடத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டனர்.

இந்நிலையில், அந்த கட்டடம் நேற்று திடீரென இடிந்து விழுந்தது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குடியிருப்புவாசிகள் வேறு இடத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டதால் உயிர் சேதம் ஏற்படவில்லை. இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. பெங்களூரில் தொடர்ந்து கட்டடங்கள் இடிந்து சேதம் அடைந்து வருவது, அடுக்கு மாடி குடியிருப்புவாசிகளிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.